Wednesday, March 28, 2018

வேதங்கள்


Thank  : 🌺அகாரப்பள்ளி அறக்கட்டளை🌺 Whatapp group


ஓம் நமச்சிவாய.......  சிவாய நம ஓம் .......
☘☘☘☘☘☘☘☘☘☘☘

வேதங்கள்
☘☘☘☘

📚வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும்.

📚காலத்தால் முற்பட்டதும் ஆகும்.

📚வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

📚கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்துக்களின் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தது என்று பண்டித பால கங்காதர திலகர் நிரூபித்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்

📚இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித்என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது.

📚வித் என்றால் சமசுகிருதத்தில் அறிதல் என்று பொருளாகும்.

📚வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்றும் பொருள்படும்.

📚 வேதங்களின் வகைகள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

📚இந்து சமயத்துக்கு அடிப்படையானவை மூன்று வேதங்கள் ஆகும்.

📚ரிக், யஜூர், சாம வேதம் ஆகியவை தான் அடிப்படையில் வேதங்களாகக் கருதப்பட்டன.

📚அதர்வணத்தை தீமை என்று கருதினார்கள்.

📚பிற்காலத்தில் தான் அது நான்காவது வேதமாகச் சேர்க்கப்பட்டது.

📚இவை தமிழில்  நான்மறை என்றும் கூறப்படும்.

📚என்றாலும் தமிழில்  நான்மறை  என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்).

🌹ரிக் வேதம்,

🌹யசூர் வேதம்

🌹சாம வேதம்

🌹அதர்வண வேதம்
என்பனவாகும்.

✍வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாசர்.

✍வேதங்களை "சுருதி, மறை" எனவும் கூறுவர்.

🌺வேதங்களின் நான்கு பாகங்கள்

வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு.

அவையானவை:

1. சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)

2. பிராமணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்

3. ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்

4பநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.

நான்கு வேதங்கள்
☘☘☘☘☘☘☘

பொதுவாக வேதங்களை இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கலாம் ( அவற்றின் கால அடிப்படையில் )
✍ 1. முற்கால வேதம்
✍  2. பிற்கால வேதம்

1. முற்கால வேதம்
☘☘☘☘☘☘☘

✍ ரிக் வேதம்
(அகாரப் பள்ளி அறக்கட்டளை  சிவனடியார்களே...... தாங்கள் ஆறாம் வகுப்பு முதல்.... உயர் கல்வி வரை.... வேதங்களில் மிகவும் பழமையானது எது என்ற கேள்விக்கு இந்த பதிலை அளித்தது நினைவு இருக்கிறதா...😳😳😳 )

📚இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

📚இதன் காலம் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை ஆகும்.

📚ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

📚ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.

📚இப்பாடல்கள் ரிக் வேத மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், பழக்கங்கள் ஆகியவற்றை தெளிவாக கூறுகின்றது.

📚மேய்ச்சலே ரிக் வேதகால மக்களின் முக்கிய தொழிலாகும்.

📚ரிக் வேத மக்கள் தச்சு வேலைகளும் செய்துள்ளனர்.

📚மண்வேலைகள் செய்வது, நூல் நூற்றல் , பருத்தி கம்பளி உடைகள் தயாரிப்பது ஆகியன ரிக்வேத கால மக்களின் உப தொழிலாக இருந்துவந்துள்ளன.

📚மேலும் வேதங்கள் மக்களின் கடவுள்களைப் பற்றியும் அதிக தகவல்கள் தருகின்றன.

📚ரிக் வேத மக்கள் இந்திரனையும், அக்னியையும் முதற்கடவுளாக வழிபட்டுவந்துள்ளனர்.

பிற்கால வேதங்கள்
☘☘☘☘☘☘☘

பிந்தைய வேத காலங்களில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளனர். ( அதாவது கங்கை சமவெளி....)

🌹இக்குறிப்புகளை பிந்தைய வேதங்கள் குறிப்பிடுகின்றன.

🌹பிந்தைய வேத காலங்களில் அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்களும் மாற்றம் பெற்றுள்ளன.

🌹முந்தைய வேத காலங்களில்  கடவுளான இயற்கையை விட சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகியோரை வழிபட்டு வந்துள்ளனர்.

📚2. யசுர் வேதம்
☘☘☘☘☘☘

🌹இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும்.

🌹இதன் காலம் கி.மு 1400 முதல் கி.மு 1000 வரை ஆகும்.

📚3. சாம வேதம்

🌹இதுவும் பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும்.

🌹சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும்.

🌹சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது.

📚 4.அதர்வண வேதம்

📚அதர்வண வேதம் இறுதியான வேதமாகும்.

📚இதனை நான்காவது வேதம் என்றும் கூறுவர்.

📚அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.


🌺 அகாரப்பள்ளி அறக்கட்டளை சிவனடியார்களே..... நன்றாக சிந்தியுங்கள்.... வேத காலத்தில்.... வேதங்களைத் தழுவி.... அதன்.... பாடல்களைக் கொண்டு  இயற்றப்பட்ட இலக்கியங்களை வேத இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகிறது.

வேத இலக்கியங்கள்
☘☘☘☘☘☘☘

நான்கு வேதங்களைத் தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய அனைத்தும் வேத இலக்கியங்களில் அடங்குவனவாகும்.

📚வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் 🌺பிராமணங்களில்🌺 கூறப்பட்டுள்ளன( ஆதலால் வேதங்கள் @ பிராமணங்கள் ஓதுபவரை பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டனர்).

 📚ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை 🌺உபநிடதங்கள்🌺 கூறுகின்றன

📚ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின்முப்பெரும் பிரிவுகளான

✍சைவம்,

✍வைணவம்,

✍சாக்தம்

ஆகிய சமயங்களின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும்

✍✍✍✍✍✍✍✍✍✍

அன்பிற்கினிய அகாரப்பள்ளி அறக்கட்டளை அடியார்களே.... நான் ஏற்கனவே பகிர்ந்த @உபநிடதங்கள்@ பற்றிய பகிர்வும் இந்த வேத கால இலக்கியங்களில் ஒன்று ஆகும்.
☘☘☘☘☘☘☘☘☘☘

விரைவில் நமது குழுவின் சிவ வாக்கியர் அய்யா  மேற்கோள் காட்டிய தைத்திரிய உபநிடதம் பற்றி பகிர்வு செய்தேன்....

மீண்டும் அந்த.... முக்கியமான பிற .... ஒன்பது..... உபநிடதங்களையும் கூடிய விரைவில் விளக்குகிறேன்.....

ஓம் நமச்சிவாய..... சிவாய நம ஓம் ......


☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘

🌹 அன்புடன் பகிர்வது
🌹சி. மதியழகன்
🌹 பட்டதாரி ஆசிரியர்
🌹 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
🌹 வாழப்பாடி
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘



No comments:

Post a Comment