Wednesday, August 9, 2017

மந்திராலய ராகவேந்திரர் ஆராதனை 10.08.2017




மந்திராலய ராகவேந்திரர் ஆராதனை 10.08.2017
No automatic alt text available.
இந்த உலகம் தோன்றிய பின் பல்வேறு கால கட்டங்களில் ரிஷிகள், சாதுக்கள், புனிதர்கள், சரணர்கள், மடாதிபதிகள் பிறந்து பாரத மண்ணில் பல்வேறு ஆன்மிக திருப்பணிகளுடன் உலக நன்மைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். இப்படி பிறந்த மகான்களில் கடவுளுக்கு நிகராக போற்றப்பட்டு வணங்கப்பட்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே. தெய்வத்துக்கு இணையாக போற்றி வணங்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் கடந்த 15ம் நூற்றாண்டில் பிறந்து கலியுக காமதேனு பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீராகவேந்திர தீர்த்த சுவாமிகளும் ஒருவராக உள்ளார். கிருஷ்ணர் மீது அளவு கடந்த பக்தி கொண்டதினால் கிருஷ்ணரின் மறு உருவமாகவே இந்தக் கலியுகத்தில் பிறந்து மக்கள் தேவைகளை ராகவேந்திரர் பூர்த்தி செய்ததாக வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.
வரலாறு:
கடந்த 1595ம் ஆண்டு திம்மண்ணா பக்துவா கோபிகாம்பாள் தம்பதியரின் மகனாக தமிழகத்தில் புவனகிரி என்ற குக்கிராமத்தில் ராகவேந்திரர் (வெங்கட்ராமன்) பிறந்தார். இவரது பெற்றோர் வைணவக் கோட்பாடுகளை போற்றி வளர்த்ததுடன் மிகுந்த ஆசார பண்பாடுகளை போற்றிக் காப்பாற்றி வந்த குடும்பமாக இருந்தது. தந்தை வழியில் வெங்கட்ராமன், பகவான் கிருஷ்ணன் மீது மிகுந்த பக்தி கொண்டு வேண்டினார். அதன் காரணமாக சிறு வயதிலேயே அவர் புத்திசாலியாக போற்றப்பட்டார். அவர், சிறு பிள்ளையாக இருந்தபோது பெற்றோரை இழந்து அவரது அண்ணன் குருராஜருடைய பராமரிப்பில் இருந்தார். அவரது தாய் மாமனான மதுரையைச் சேர்ந்த லஷ்மி நரசிம்ம ஆச்சார்யாவிடம் ஆரம்பக் கல்வியை முடித்தார். வாலிப வயது வந்தபோது சரஸ்வதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். கும்பகோணத்திற்கு வந்து ஸ்ரீசுதீந்திர தீர்த்தரிடம் வேத ஆராய்ச்சிக்கான பயிற்சிகளை முடித்தார்.
சுதீந்திர தீர்த்த சுவாமிகள் கனவில் தோன்றிய கலியுகக் கண்ணன் ஸ்ரீகிருஷ்ணன், மடத்தை வழிநடத்த ராகவேந்திர தீர்த்தர் சரியான நபர் என்று உணர்த்தினார். மறுநாள் தூங்கி எழுந்த பின் பகவான் கிருஷ்ணன் கனவில் கூறியதை ராகவேந்திரரிடம் சுதீந்திர தீர்த்தர் கூறி எனக்குப் பின் இந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதன்பின் பிருந்தாவன் மடத்தின் 55 வது தீர்த்தராக பொறுப்பேற்றார்.
ராகவேந்திரர் ஆராதனை விழா
ஆண்டுதோறும் ஆவணி மாதம் ராகவேந்திரர் ஆராதனை விழா கொண்டாடப்படுகிறது. பூர்வ ஆராதனை, மத்திய ஆராதனை, உத்ர ஆராதனை என்ற பெயரில் ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. அதன்படி ராகவேந்திரின் 346வது ஆராதனை விழா 10.08.2017 அன்று நடைபெறுகிறது. கர்நாடக-ஆந்திரா மாநில எல்லையில் உள்ள மந்தராலயாவில் மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஸ்ரீராகவேந்திரன் மடாலயத்தின் சார்பில் ஆராதனை நடக்கிறது.

No comments:

Post a Comment