Wednesday, July 12, 2017

Lalitha Sahasranama ... Karanguli -nakotpanna-narayana-dashaakrithi


Image may contain: 1 person, standing

Thanks to Aravind Subramanyam for this Lovely picture.
Karanguli -nakotpanna-narayana-dashaakrithi
I bow down to Devi who created from Her fingernails all ten incarnations of Sriman Narayana
(Lalitha Sahasranama )

கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி:
தன் விரல் நகத்தின் நுனியிலிருந்து நாராயணனின் பத்து அவதாரங்களையும் உருவாக்கியவளே போற்றி 
(லலிதா ஸஹஸ்ரநாமம் )
Thank to Kumar Ramanathan FB
கராங்குலி-நகோத்பன்ன-நாராயண-தசாக்ருத்யை (80)

கைவிரல் நுனிகளால் நாராயணனது தசாவதாரங்களை தோற்றிவித்தவள்
தனது நகங்களில் இருந்து நாராயணனின் பத்து அவதாரங்களை தோற்றுவித்தவள்.

பண்டாசூரன் தனது சர்வாஸுர அஸ்திரத்திலிருந்து இராவணன் முதலான பத்து அசுரர்களையும் தோற்றுவித்தான். அந்தப் பத்து அசுரர்களும் நாரயாணன் மூலம் பத்து அவதாரங்களில் கொல்லப்பட்டார்கள்.

ஜீவனும் ஈஸ்வரனும் சேர்ந்த வடிவம் நாராயணன், தசக்ருத என்பது மனிதனது ஐந்து நிலைகளான விழிப்பு, உறக்கம், கனவு, துரியம் (முதல் மூன்று நிலைகளிலும் உணர்வுடன் இருத்தல்) தூரியாதிதம் (துரியத்திற்கு மேற்பட்ட நிலை, இந்த நிலையில் இருமை அற்று உணர்வு பிரம்மத்துடன் கலக்கத் தொடங்கும்) பிரம்மத்தின் ஐந்து தொழிகளான் ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல்,மறைத்தல் ஆகியன சேர்ந்து தஸக்ருத எனும் பத்தும் உருவாகின்றன. இங்கு நாராயண என்பது மஹா விஷ்ணுவைக் குறிக்கவில்லை என்றே கருத வேண்டும். விஷ்ணு லலிதையின் சகோதரர், ஆகவே வாக்தேவிகள் இங்கு குறிப்பிடப்படும் நாராயணன் வேறு விடயத்தினை குறிப்பதாக அமையவேண்டும். ஆகவே இதன் சரியான பொருள் மனிதனது ஐந்து உணர்வு நிலைகளும், பிரம்மத்தின் ஐந்து தொழில்களுமாக தனது பத்து நகங்களில் இருந்து உருவாக்கினாள் என்பதாகும். ஏற்கனவே தேவியின் பிரகாச விமர்ச ரூபங்கள் விபரிக்கப்பட்டுள்ளது. இந்த சகஸ்ர நாமத்தில் உள்ள ஒவ்வொரு நாமமும் இந்த இரண்டு ரூபத்தில் ஏதாவது ஒன்றைப்பற்றியே விவரிக்கின்றது.

துரியம் உணர்வின் நான்காவது நிலை, இது மற்றைய விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளையும் ஒன்றாகச் சேர்த்த நிலை, இந்த துரிய நிலை ஆன்மீக உணர்வு நிலை, இது உளவியல் குறிப்பிடும் உணர்வு நிலையிலும் மாறுபட்டது. இது தெய்வத்தினை சாட்சிபாவமாக உணர்ந்த நிலை.

துரியாதீத என்பது மனது துரியத்தினை கடந்த நிலை, இந்த நிலையில் மனதின் பாகுபடுத்தும் தன்மை இழந்து பிரம்மத்துடன் ஒன்றும் நிலை ஆரம்பிக்கும். இந்த நிலையினை அடைந்தவருக்கும் முழுப்பிரபஞ்சமும் ஒன்றான பொருளாகா அதீத ஆனந்தத்தில் நித்தமும் திளைத்திருப்பர்.
.

No comments:

Post a Comment