Tuesday, May 23, 2017

சீர்காழி அருகில் 11 ரிஷபவாகன சேவை 26-5-2017 ....


'பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுக்கும் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி''....'' பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி'': 26-5-2017 ....

''திருநாங்கூர் பக்தவத்சலாம்பிகை உடனுறை நம்புவார்க்கு அன்பர் திருக்கோயில்''....தொடர்புக்கு:9498076515/9840660435....

தமது கட்டளையை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்றுவந்த தாட்சாயணியின் மீது கொண்ட சினத்தினால் சிவபெருமான் இங்கு உள்ள உபயகாவேரி என்னும் இடத்தில் ருத்திரதாண்டவம் ஆடியபோது அவரது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர்ந்தது. அப்பதினொரு இடங்களிலும் இன்னொரு சிவபெருமான் உருவம் தோன்றி ருத்திரதாண்டவம் நிகழ்த்தத் தொடங்கியது.இதனால் இவ்வுலகிற்குப் பேரழிவு நேருமென்று அஞ்சி தேவர்கள் மஹா விஷ்ணுவை அடைக்கலம் பற்ற, அவர் ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த 11 சிவபெருமான்களையும் கட்டி தழுவினார்.இதனால் சினம் தணிந்து சாந்தநிலைக்குத் திரும்பிய சிவபெருமான்,

தமது சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் கோயில் கொண்டு உலக மக்களுக்கு அருளும்படிப் பெருமாளை வேண்டிக்கொண்டாராம். அவ்விதம் மகாவிஷ்ணுவின் பதினொரு திருக்கோலங்கள் கோயில் கொண்ட பதினொரு திருத்தலங்கள் திருநாங்கூரில் திவ்விய தேசங்களாக அமைந்து உள்ளன.அதுபோல இங்கு ஈசன் 11 வடிவம் எடுத்து ருத்திரதாண்டவம் ஆடிய 11 இடம்களிலும் 11 சிவாலயம்களும் உள்ளன .

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவில் திருநாங்கூரில் திருமணிமாடக் கோயில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் 11கருடசேவை திருவிழா சிறப்பாக நடக்கும்.அதுபோல இந்த சிவாலயங்களின் சார்பாக ''பன்னிரு ரிஷபாரூட'' திருவிழா சித்ரா பௌர்ணமி நாளில் அக்காலத்தில் இங்கு நடந்து வந்து உள்ளது.
அதில் இப்போதும் திருநாங்கூரில் தை அமாவாசை மறுநாள் 11கருடசேவை திருவிழா சிறப்பாக நடந்து  வருகிறது.ஆனால் பல வருடங்களுக்கும் மேல் இங்கு சித்ரா பௌர்ணமியில் இரவில் இங்கு நடக்கும் பன்னிரு ரிஷபாரூட திருவிழா தடைபட்டு இருந்து வந்தது.

திருநாங்கூரில், சிவபெருமான் பன்னிரு பீடங்களில் எழுந்தருளி,மதங்க மஹரிஷிக்கு ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்த வைபவம் ஆதி காலத்தில் நடந்து வந்து உள்ளது.கால ஓட்டத்தில் இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி 
மறக்கப்பட்டு ,மறைக்கப்பட்டு இந்த விழா தொடர்ந்து பல வருடங்கள் நடக்காமல் இருந்து வந்தது.ஈசனின் மிகப் பெரும் கருணையால் தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.எனவே பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி விழாவின் அருமையினை உணர்ந்து அன்பர்கள் அனைவரும் இந்த விழாவினை காண திருநாங்கூர் வாருங்கள். ஈசனின் ஒரு ரிஷபாரூட திருக்காட்சி கண்டாலே பெரும் பாக்கியம்.ஆனால் இங்கு ஒரே தலத்தில் பன்னிரு திருக்கோயில்களில் உள்ள ஈசன்களும் அம்மை உமையவளுடன் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி அருள்வது காண்பது வெகு புண்ணியம்.

திருநாங்கூரில் உள்ள பன்னிரு பீட சிவ திருத்தலங்கள்:

1. தத்புருஷ பீடம்-திருநாங்கூர் ராஜ மாதங்கி உடனுறை மதங்கீஸ்வர சுவாமி திருக்கோயில்
2. அகோரபீடம்-கீழைத் திருக்காட்டுப்பள்ளி அகிலாண்ட நாயகி உடனுறை ஆரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில்
3. வாமதேவ பீடம்- கீழ் சட்டநாத புரம் திருயோகீஸ்வரம் யோகாம்பாள் உடனுறை யோகநாத சுவாமி திருக்கோயில்
4. சத்யோத்ஜாத பீடம்- காத்திருப்பு சொர்ணாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி திருக்கோயில்
5. சோம பீடம்- திருநாங்கூர் அமிர்தபுரீஸ்வரர் திருக்கோயில்
6. சார்வ பீடம்-அல்லிவிளாகம் செம்பதனிருப்பு நாகநாத சுவாமி திருக்கோயில்
7. மகாதேவ பீடம்- திருநாங்கூர் பக்தவத்சலாம்பிகை உடனுறை நம்புவார்க்கன்பர் சுவாமி திருக்கோயில்
8.பீமபீடம்-திருநாங்கூர் கைலாசநாத சுவாமி திருக்கோயில்
9.பவபீடம்-திருநாங்கூர் சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயில்
10.பிராண பீடம்- அத்தீஸ்வரம் பெருந்தோட்டம் அதுல்ய குஜாம்பாள் உடனுறை ஐராவதேஸ்வர சுவாமி திருக்கோயில்
11.ருத்ரபீடம்- அன்னப்பன் பேட்டை சுந்தராம்பாள் உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
12. பாசுபத பீடம்-மேல்நாங்கூர் நயனவரதேஸ்வர சுவாமி திருக்கோயில்
......இத்திருக்கோயில்களில் உள்ள ஈசனும் அம்பாளும் மஹாதேவ பீடம் என்று அழைக்கப்படும் நம்புவார்க்கு அன்பர் திருக்கோயிலில் இரவில் தனித்தனியாக எழுந்தருளி ''பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி''தந்து நம்மை காலமெல்லாம் அன்பால் அரவணைப்பர்.வரும் 26-5-17 அன்று மாலை 6.30 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் பன்னிரு சிவபெருமானின் உற்சவ திருமேனிகளுக்கும் சமகாலத்தில் திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டு, திவ்யதம்பதிகள் ரிஷபாரூடத்தில் திருக்காட்சி தரும் வைபவம் நடைபெறும்.
பின்பு அன்று இரவு 9.30 மணிக்கு மேல் பன்னிரு ரிஷபாரூட மூர்த்திகளும், திருமுறை பாராயணங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, வானவேடிக்கையுடன், திருவீதியுலா வரும் நிகழ்வு நடைபெறும்.இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி காண்பதன் மூலம் நம் பாவ வினைகள் அகன்று ஒளிமயமான நல் வாழ்க்கை அமையும்.

சீர்காழியில் இருந்து 8 கி.மீ., தூரத்திலுள்ள அண்ணன் கோயிலுக்கு சென்று,அங்கிருந்து ஆட்டோவில் திருநாங்கூர் செல்லலாம். "நாயேனை ஆட்கொண்டஅண்ணாமலையானைப் பாடுதும் காண்".
"நாயேனை நாளும் நல்லவனாக்க,ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்"..."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடிநிழலில்"...

கட்டுரையாக்கம்:அன்பன்.ப்ரியமுடன்;சிவ.அ.விஜய்பெரியசுவாமி

No comments:

Post a Comment