Friday, January 8, 2016

பருவதமலையில் கும்பாபிஷேகத் திருவிழா 20/1/2016

அன்புடையீர்! வணக்கம்.

தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் சிறப்புமிக்க மலை - ஸ்ரீபருவதமலை.

திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள
இம்மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்கிறார்கள்; பலருக்குக் காட்சிக் கொடுத்து ஆசியும் வழங்கியிருக்கிறார்கள்.

இம்மலையில்
2000 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்ததும்
4560 அடி உயரத்தில் உள்ளதுமான அருள்மிகு பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜீன சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

பல நூறு ஆண்டுகளாக நமது முன்னோர்கள் இக்கோவிலை சீரும் சிறப்புமாகப் பாதுகாத்து வந்தார்கள்.

ஆனால் கடந்த 600 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பு இன்றியும் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும் கவனிப்பாரின்றி விடப்பட்டது   இத்திருக்கோவில்.

இந்நிலையில், ஒருசில பக்தர்கள்  "திருவல்லிக்கேணி ஸ்ரீ பருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கம்" என்னும் அமைப்பின் பெயரில் ஒன்று சேர்ந்து தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் அனுமதி பெற்று 23.04.2010 அன்று ஆலயத் திருப்பணியைத்  தொடங்கினார்கள்.

இத்திருப்பணிக்குத் தேவையான தண்ணீர், மணல், சிமென்ட், கற்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானப் பொருட்களும் தரைப்பகுதியிலிருந்து 4560 அடி உயரத்திற்கும் சுமார் 4 மணி நேரம் கால்நடையாகவே சுமந்து கொண்டுபோய்ச்  சேர்க்கப்பட்டன!

இப்பணியில் கூலி ஆட்களைத் தவிர்த்துக் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களும் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

செங்குத்தான அமைப்புக் கொண்ட இந்த மலையில் 4560 அடி ( அதுவும்  கட்டுமானப் பொருட்களை சுமந்துகொண்டு) ஏறுவதென்பது மிகவும் சவாலானப் பணி!

மழைக்கால இன்னல்களை சொல்லவேத் தேவையில்லை.

இவ்வாறாகப் பல்வேறு சவால்களுக்கு இடையே 5 ஆண்டுகள் தொடர் முயற்சியின் மூலம் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து  திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கும் கோவிலுக்கு,  வருகின்ற 20-01-2016 புதன் கிழமை காலை 9.31 - 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

 "ஒருமுறை பருவதமலைக்குச் சென்று வந்தால் பூமியிலுள்ள எல்லா சிவாலயத்திற்கும் சென்று வந்ததற்குச் சமம்" என்று கூறப்படும்
ஸ்ரீ பருவதமலையில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜீன சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தங்களை அன்போடு அழைக்கின்றோம்.

மேலும், கும்பாபிஷேகத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படுவதால் பக்தர்கள் பெருமளவில் பொருளாதார உதவி செய்து இறைபணியில் தாங்களும் இணையுமாறு பக்தியுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

BANK DETAILS

Account Name: Triplicane Sri Paruvathamalai Adiyargal Thirupani Sangam
A/c No. 60052010054870
Bank: Syndicate Bank
Branch: Royapet Branch
IFS Code: SYNB 0006005.

For further details, please contact:
R. தரணி -(9962382601)
தலைவர்

விகாஸ் E. பாண்டியன் (9884236697)
செயலாளர்

K.R. இந்திரன் (9841674725)
பொருளாளர்

திருவல்லிக்கேணி ஸ்ரீ பருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கம்
Regd.No. 138/2009
7, வி.ஆர்.பிள்ளை முதல் தெரு,
டாக்டர் பெசன்ட் ரோடு,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600005





No comments:

Post a Comment