Monday, June 22, 2015

சுத்தசிவநிலை

Deena Dayaalan
https://suthasivam.blogspot.com/2010/08/blog-post_24.html
on Tuesday, 24 August 2010


சுத்தசிவநிலையில் இருந்து பதி, பசு, பாசம் என்ற மூன்று நிலைகள் தோன்றின. இவை மூன்றும் அனாதி. எப்போதும் இருக்கும். இவை மூன்றையும் தொழிலாக செய்வது சுத்தசிவமாகும். ஆகையால் இந்த மூன்று நிலைகளும் சுத்தசிவத்தின் தொழில் நிலைகள் ஆகும். 

சுத்தசிவநிலையில்லிருந்து நான் என்கிற ஆணவத்துடன் ஆன்மா உருவாகியது. ஆன்மாக்கள் ஓர் அறிவு, இரண்டு அறிவு, மூன்று அறிவு பிராணிகள் என்று பல பிறவிகள் எடுத்து கடைசியில் மனிதன் என்கிற ஐந்து அறிவுள்ள பிராணியாக பல ஜென்மங்கள் எடுத்தான். சக பிராணிகளின் போட்டியலும், பிற பிராணிகளின் துன்புறுத்தல் காரணமாகவும் பயத்தின் காரணமாகவும் கடவுள் தத்துவம் என்கின்ற பதிநிலை உருவாக்கியது. கடவுள்நிலை கொண்டு மதங்கள் உருவாககியது. சிறுதெய்வங்கள் வழிபாடுகள், பூசை முறைகள், சடங்குகள், திருவிழாகள் முதலியவை உருவாகியது. இன்றுவரை இந்த தொழில்நிலை இருந்து வந்துள்ளது. ஆன்மாக்கள் அனுபவிக்க பாசம் என்கின்ற உலக ததுவதொழில் உருவாகியது. மனிதன் குழந்தை, இளமை மற்றும் முதுமை பருவங்கள்ளை பெற்று பல தொழில் நிலைகலாகிய சிறுவன்,சிறுமி,மாணவன்,மாணவி, ,தொழிலாளர், கணவன்,மனைவி, தகப்பன், தாய், மாமனார், மாமியார், தாத்தா, பாட்டி,முடிவில் மரணமடைதல், அடுத்தபிறவி , என்ற வாழ்க்கை தொழில் என்று கால சக்கரம் சுழன்ற ஆரம்பித்ததது.

ஆன்மாக்கள் பல பிறவிகள் எடுத்து பல துன்பங்களை அடைந்து, போதும் இந்த பிறவி என்றநிலை என்றுநினைத்து பின். தான் யார், என்குகிருந்து வந்தோம் எங்கே செல்கிறோம் என்று ஆராய்ச்சி செய்கிறது. தான் பெற்ற துன்பம் வேறு வுயிர்கள் துன்பபடகூடாது என்று பெறவுயிர்களுக்கு வுதவி செய்ய ஆரம்பிக்கிறது. தன்னை பற்றி வுணர்ந்துகொள்ள துடிக்கிறது. பின் நல்ல சமூகவாதியாக வாழ்ந்து மரணம்தழுவி பின் அடுத்தபிறவி சென்று மறுபடியும் கலசக்கரதியில் சுற்றுகிறான். தன்னை யொரு ஆன்மா என்று உணர்தவன் ஆன்மீகவாதி என்றநிலையில் பிரவூயிர்களுக்கு நல்லது செய்கிறோம் என்று தொண்டு செய்து பின் மரணம்தழுவி அடுத்த பிறவி சென்று காலசக்கரத்தில் சுழல்கிறான். தான் சுத்தசிவநிலை என்ற வூன்மையை அறிந்து , சுத்தசிவநிலையே தன்னை ஆன்மா என்றும் பின் மனிதன் என்றும் அறியாமையில் மூழிகி தவிக்கிறது என்ற அறிவு தெளிவு பெறுகிறது. தன்னைத்தவிர வேறுயாரும் இல்லை என்ற அறிவுத்தெளிவு பெருகிறது தானே எல்லாமாக இருப்பதை அறிந்துகொல்கிறது. இன்பம், துன்பம், நல்வினை, தீவினை என்ற பெதமெல்லாநிலை அடைந்து ,பின் கலசக்கரதில்லிருந்து விலகி தன் சுத்தசிவநிலையை அடைகிறது.


சுத்தசிவநிலை பேரறிவாகிய நிலையில் இருகிறது. அறியாமையால் ஆன்மா பல மாயாபிறவி பெற்று பின் தன் அறிவால் பேரறிவை அறிந்துகொண்டு அறிவே வடிவமாய் மாறி பேரறிவை அடைகிறது.


No comments:

Post a Comment