Friday, May 30, 2014

சும்மா - 4

"சும்மா
#4


வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி



இந்த "சும்மா" என்ற சொல்லைத் தற்சமயம் பல வகையான அர்த்தங்களில் பயன்படுத்துகிறோம் அல்லவா? சிற்சில பிரயோகங்களைப் பார்ப்போமே?

(1) பேசாமல் இருப்பது:

"என்னவே! அப்பொம் பிடிச்சு பாக்கேன்?
தொணதொணன்னுன்னு பேச்சிக்கிட்டே இருக்கீர்!
இப்பொம் கொஞ்சம் சும்மா இரும்."

(2) ஒன்றும்செய்யாமல் இருப்பது:

"துருதுருன்னு எதையாவது செய்யாமல் கொஞ்சம் சும்மா இரு!'

(3) இயல்பாக normal ஆக இருப்பது:

"என்னா மம்முது? ஒங்க வாப்பா முடியாம இருந்தாலுவளே?
இப்ப எப்பிடி இருக்காலுவ?"
"இப்ப பரவாயில்லை, மாமு. சும்மாதான் இருக்காஹ."

(4) வெறுமையாக இருப்பது:

"அந்த வீட்டுல யாரும் குடி வந்துட்டாஹளா?"
"இல்லை. இன்னும் சும்மாதான் கிடக்குது."

"அவள் காதுல கழுத்தில ஒண்ணுமே நகைநட்டு இல்லாம சும்மா இருக்கே?"

(5) தொழிலின்றி இருப்பது:

"ஏனுங்கோ? உன்ற பையன் வேலையில சேர்ந்துட்டானுங்களா?"
"இல்லீங்களே! சும்மாதானே இருக்குறானுங்கோ!"

(6)காரணமின்றி:

"அடங்க இஸ்க்கி! இன்னாபா இம்மாந்தொலை வந்து கீறே?"
"சொம்மாதாங்கண்ணு."

(7)பயனின்றி:

"ஏங்க்றேன், கானா ரூனா பானா ழானா? என்னங்கிறேன்?
அந்த வடுவாப்பய சும்மா வெட்டித்தனமா இஙிண வந்துக்கிணும்
அஙிண போயிக்கிணுமா இருக்கான்?"

(8)விளையாட்டாய்ச் சொல்வது:

"வக்காலி! ஏண்டா, குருத பறக்குதுன்னுட்டு சொன்ன?"
"குருத எங்கனாச்சும் பறக்குமா? சும்மா சொன்னேன்."

(9) கருத்தில்லாமல்:

"இவ்வளவு நேரம் சும்மாவா உங்கிட்டே அவ்வளவு கதையும் சொன்னேன்?"

(10) இலவசமாக:

"இது என்ன விலைக்கு வாங்கினே?"
"விலைக்கெல்லாம் வாங்கலை. சும்மா கெடச்சுது."

(11)ஓய்வு எடுத்தல்; relaxing:

"ரொம்ப tired ஆ இருக்கு. கொஞ்சநேரம் சும்மா இருக்கேன்."

(12) அடிக்கடி:

"ஏன் சும்மா சும்மா வந்துண்டே இருக்கேள்?"

(13) தடங்கலின்றி:

"மத்தவங்களுக்குத்தான் பர்மிஷனெல்லாம் தேவை.
நீங்க சும்மா வாங்க."

(14) பயன்படுத்தப்படாமல்:

"சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!"

"சும்மா" என்ற சொல் கன்னடத்திலும் மலையாளத்திலும் இருக்கிறது.
வேறெந்த இந்திய மொழியிலும் இருக்கிறதா என்பது தொ¢யவில்லை.

ஆனால், மலாய் மொழியில் "சும்மா" என்ற சொல் இருக்கிறது.
இரண்டே அர்த்தங்களில் மட்டுமேதான் வழங்குகின்றது.

Mana pergi? (எங்கே போகிறாய்?)
"Cuma jalan jalan sahaja." (சும்மா நடந்துகொண்டிருக்கிறேன்.)

"Baju-ni cantiknya! Berapa harga?" (இந்தச் சட்டையின் விலை என்ன?")
"Tak beli-ni! Dapat percuma-dah! (வாங்கவில்லை. இலவசமாகத்தான் கிடைத்தது.)

மேலே உள்ள எடுத்துக்காட்டுகள் தமிழர்களிடையே விளங்கும் பல வட்டார, சமூக, பேச்சுமரபுகளில் இருப்பதைக்காணலாம். எல்லாருமே "சும்மா" என்னும் சொல்லைபயன்படுத்துகிறார்கள் என்பதையே அது சற்று அழுத்தமாகக் காட்டும். அவ்வளவுதான்.

இந்த நீள்கட்டுரை தமிழ் இணையத்தில் வெளியிட்டேன். அதன் தொடர்பாக சில உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பியிருந்தனர். அவற்றிற்காக கொடுக்கப்பட்ட மேல்விளக்கங்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

¡¢ஷி தன்னுடைய posting ஒன்றில் ஜாக்ரத், ஸ்வப்னா, ஸ¤ஷ¤ப்தி, து¡¢யம் ஆகியவற்றைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

இவையெல்லாம் மனிதனின் உணர்வுகளின் பல்வேறு நிலைகள். They are various levels of Human Consciousness. இவற்றை "அவஸ்தை"கள் என்பார்கள். இவற்றுடன் து¡¢யாதீதம் என்பதனையும் சேர்த்து "பஞ்சாவஸ்தைகள்" என்பர்.

1. ஜாக்ரத் அல்லது சாக்கிரம் என்பது முழு நினைவோடு இருக்கும் விழிப்பு நிலையாகும். இதனை தமிழ் சித்தர் மரபு "நனவு" என்று அழைக்கும்.

மூளையில் தோன்றும் "Electro Encephalography" யில் "beta rhythm" காணப்படும்.

2. ஸ்வப்னா அல்லது சொப்பன நிலையாகிய கனா நிலை - தூக்கத்தில் கனவு காணும் நிலையாகும் இது. இதனை "Rapid eye Movement Phase of Sleep" அல்லது "REM Stage of Sleep" என்றும் கூறுவார்கள்.

இதன்போது மூளையின் E.E.G.யில் "theta rhythm" பதிவாகும்.

3. ஸ¤ஷ¤ப்தி அல்லது சுழுத்தி அல்லது உறக்க நிலை - கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கம். தூங்க ஆரம்பித்து அரைமணியிலிருந்து ஒன்றரை மணி நேரம் வரையில் இந்த நிலை பெரும்பாலும் நீடிக்கும். இதில் E.E.G. patternஇல் "delta rhythm" தோன்றும்.

4. து¡¢ய நிலை- இது சமாதி நிலை. சும்மா இருக்கும் நிலை. இதன் ஆரம்ப நிலைகளில் E.E.G. யில் "alpha rhythm" தோன்றும்.

5. து¡¢யாதீதம் - இது போக்கும் வரவும் அற்ற நிலை. சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார் அல்லவா? "போக்கும் வரவும் புணர்வும் இல்லாப் புண்ணியனே".

பிறப்பு இறப்பு ஏற்படாத நிலை. உயிர்ப்படக்கம் என்று சித்தர்கள் கூறுவார்கள். இதுதான் "நிர்விகல்ப்ப சமாதி" எனப்படுவது. "சாயுஜ்ஜியம்" என்பதுவும் இதுபோன்றதுதான்.

தமிழ் சித்தர்கள் இவற்றிலேயே உட்பி¡¢வுகளைக்கூட கண்டிருக்கின்றனர்.

1. சாக்கிரத்தில் சாக்கிரம் - மனதை வெளியில் போய் அலையவிடாமல் ஒரே விஷயத்தில் ஆழமாக ஈடுபடுத்துவது. அந்நிலையில் ஏற்படும் சிந்தனைகளை மனதில் ஆழமாகப் பதிய வைத்து நினைவில் இருத்திக் கொள்வது.

2. சாக்கிரத்தில் சொப்பனநிலை - விழிப்பு நிலையிலும்கூட மனதை அவ்வப்போது வேறு சில Fantasy களில் சஞ்சா¢க்க விடுவது. சில விஷயங்கள் மறந்தும் சில விஷயங்கள் மனதில் நிற்பதுமாக உள்ள நிலை. "Day- dreaming".

3. சாக்கிரத்தில் சுழுத்தி நிலை - கண்கள் விழித்திருந்தாலும்கூட விஷயங்களை கவனிக்காமல் மனதை உறக்க நிலையில் வைத்திருப்பது.

4. சாக்கிரத்தில் து¡¢யம் - விஷயங்களை மிக ஆழமாக non - verbal நிலையில் ஆராய்ந்து ஆழ்ந்திருத்தல். Abstract thought."ஐன்ஷ்டைன்" நிலை.

5. சொப்பனத்தில் சாக்கிரம் - தூங்கிக் கனவு கண்டு, எழுந்த பின் கனவில் கண்டது அனைத்தையும் சொல்லமுடிவது.
வெள்ளையம்மாள் பாதர் வெள்ளையிடம் பாடிய,
"போகாதே! போகாதே! என் கணவா!
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்"
என்ற பாட்டின் நிலை.

6. சொப்பனத்தில் சொப்பனம் - கண்ட கனவில் சிலவற்றை மட்டும் ஞாபகத்தில் வைத்து மற்றவற்றை மறந்து விடும் நிலை.

7. சொப்பனத்தில் சுழுத்தி - கண்ட கனவு முற்றாக மறத்தல்.

8. சொப்பனத்தில் து¡¢யம் - சொல்லத்தொ¢யவில்லை.

ஓர் உதாரணம் வேண்டுமானால் தருகிறேன்.

    Benzeze molecule இல் 6 Carbon, 6 Hydrogen அணுக்கள் இருப்பது வாசகர்களுக்குத் தொ¢ந்ததே! (தினத்தந்தி பாஷை). Hydrogen valency 1; Carbon valency 6. ஆக கார்பனின் 24 + ஹைட்ரஜனின் 6 ஆக மொத்தம் 30 கொக்கி களையும் இணைத்து கார்பனுடன் ஹைட்ரஜன் அணுக்களை சா¢யான அமைப்பில் இணைக்கவேண்டும். ஆனால் இது எப்படி என்பதுதான் பு¡¢யவில்லை.
    இதில் ஆய்வுகள் நிகழ்த்தி வந்த Dr.Kekule பல நாட்கள் போராடியும் இணைப்பை சா¢யாக உருவகப்படுத்த முடியவில்லை. எப்படியும் சில வேலன்ஸி கொக்கிகள் சும்மா தொங்கின. என்னும்பொழுது பென்ஸீன் மாலிக்கியூல் எப்படியிருக்கும் என்பதுவும் தொ¢யமுடியாமல் இருந்தது.
    ஒரு நாள். கெக்கூலே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு விசித்திரமான கனவு. ஒரு பாம்பு நெளிந்து ஆடி வந்தது.பின்னணியில் நாகின் மெட்டு கேட்டதா என்பது தொ¢யாது. அந்தப் பாம்பு அப்படியே சுருண்டு தன்னுடைய வாலைச் சுருட்டித் தன்னுடைய வாயில் திணித்துக் கொண்டது. அப்படியே ஓர் அறுமுனைச் சதுக்க வடிவில் தோன்றியது.
கெக்கூலே விழித்தெழுந்ததும் அந்த Hexagon வடிவத்தை வரைந்து ஓவ்வொரு முனையிலும் ஒவ்வொரு கார்பன் அணுவை வைத்து ஒவ்வொரு கார்பனுடனும் பக்கவாட்டில் ஒவ்வொரு ஹைட்ரஜன் அணுவைக் கொக்கி போட்டு இணைத்தார்.
    அந்த Hexagon வடிவில் Benzene molecule-இன் structural formulaவை ஏற்படுத்திவிட்டார், கெக்கூலே. இதுதான் அந்த famous Benzene Ring. Steroids போன்றவற்றின் ஆய்வுகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் Benzene Ring தான் அடிப்படை. (கெக்கூலேயை "Lord of the Rings" என்றோ "Ring-master" என்றோ அழைக்கலாமோ?)

9. சுழுத்தியில் சாக்கிரம் - தூங்கிய தூக்கத்தின் தன்மையை விழித்ததன்பின் உணர்ந்திருத்தல்.

10. சுழுத்தியில் சொப்பனம் - தூங்கினோமா, தூங்கவில்லையா என்ற ஐயப்பாடு உள்ள நிலை.

11. சுழுத்தியில் சுழுத்தி - தூங்கியதுகூட தொ¢யாத நிலை.

12. சுழுத்தியில் து¡¢யம் - Hypnosis, Mesmerism செய்வதெல்லாம் இந்த மாதி¡¢ மனமுறங்கிய நிலையில்தான்.

    அந்த அளவிற்குப் பண்டைய கால சித்தர்கள் ஆராய்ச்சி செய்து உணர்ந்திருக்கிறார்கள்.

    Biofeedback கருவிகளின் உதவியோடு இந்த நிலைகளை ஆராயலாம்.

    இதனால் மனதைப்பற்றிய ஆய்வுகளில் புதிய எல்லைகளைக் கண்டறிய முடியும். இதனால் ஏற்படும் லாபமோ அளவிடப்பட முடியாததாக இருக்கும்.

    சித்தர்கள் நூல்களைப் பு¡¢ந்து கொள்ள முடியாத குப்பைகள் என்று நினைக்கப்படும் கருத்தை அகற்றி, அவற்றைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க வைக்கும்.

    இதனால் நாம் அளவிட்டு அறிந்து கொள்ளும் விஷயங்களை நாம் எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம்.

    அந்தந்த நிலைகளை வெளிக்கருவிகளினாலோ அல்லது மருந்துகளினாலோ செயற்கையாக ஏற்படுத்த முடியுமா?

    எப்படிச் செய்யலாம்?
    மனோதத்துவ ¡£தியில் இதற்கு என்னென்ன applications உண்டு?
    மனோவியாதிகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் பயன்படுமா?
    ஓர் உதாரணம் சொல்கிறேனே?
    REM Sleep இல் இருக்கும்போதெல்லாம் தூக்கத்தைக் கலைத்துவிட்டோமானால் தற்காலிக புத்திமாறாட்டம் ஏற்படும்.
    Relaxation Response போல இந்த நிலைகளை develope செய்யமுடியுமா?...etc.
Gentlemen! The sky is the limit!

    சும்மா இருத்தலுக்கு என்ன செய்யவேண்டும்?
    நம் மனதில் ஓடும் எண்ணங்களை trace பண்ணவேண்டும்.
    எங்கிருந்து தோன்றுகின்றன?
    எங்கே செல்கின்றன?
    என்ன sequence of thought ஏற்படுகிறது?
என்பனவற்றையெல்லாம் impartial observer ஆக இருந்து கவனிக்கவேண்டும். வேற்றுப் புலனுணர்வுத் தூண்டுதல்கள் sensory stimulations குறைக்கப் பட வேண்டும்.

    கண்களை லேசாக மூடிக்கொள்ளலாம். வெளி ஓசைகள் கேளா வண்ணம் தடைசெய்ய ஏதாவது மெல்லிசையைக் கேட்கலாம். சில Kitaro pieces, Enigma, Gregorian Chants, Baroque music போன்றவற்றைக் கேட்கலாம்.
    நம் பக்கத்து இசையானால் குழல், வீணை, போன்ற கருவிகளில் இசைக்கப் படும் வசந்தா, நீலாம்பா¢, மோஹனம், கானடா, தன்யாசி போன்ற ராகங்களைக் கேட்கலாம்.
அல்லது வெறும் தம்பூராவை மீட்டிக்கொண்டு அதன் சுருதியில் லயிக்கலாம்.
ஊதுவர்த்தியைப் பற்ற வைத்துக்கொள்வதால் நுகர்வு உணர்ச்சியை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். சில வகையான வாசனைகள் மனச்சாந்தியை ஏற்படுத்தும். சந்தனஎண்ணெய், அரகஜா, ஜவ்வாது, ரோஜா போன்றவை.

    இதுதான் ஆரம்ப நிலை.
    ஒரு காலத்தில் சும்மா இருக்கும் நிலையை அடையலாம்.

( இந்தக் கட்டுரை என்னுடைய சொந்த அனுபவங்கள், சிந்தனைகள், பதினெட்டு ஆண்டுக்காலப் பயிற்சி, பல நூல்களில் கண்ட அறிவு, சில பெரும் சித்தர்களின் தந்த விளக்கம் , காட்டிய வழி ஆகியவற்றின் Distilled essence என்று கூறலாம்).


No comments:

Post a Comment