Monday, July 29, 2019

ஜீவ சமாதி அருப்புக்கோட்டை



ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள்


அருப்புக்கோட்டை நகரில் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மீனாக்ஷி சொக்கநாதர்  கோவில். அதன் அருகில் அமைந்துள்ள தெப்பக் குளத்தின் கரையிலே  சமாதி கொண்டு அருளும் மகான் ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள் ஆவர்.

தற்போது சமாதி சீரமைக்கப்பட்டு , கல்லால் கோவில் எழுப்பி வருகின்றனர்.
சுவாமிகளைப் பற்றிய தகவல்கள் விரைவில் வழங்கப்படும். 





               'புலியூரான் சித்தநாதர் கோயில்' 


 சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டையிலிருந்து 10.கி.மீ. தொலைவில் புலியூரான் பகுதியில் கட்ட புளியமரம் (1 km) என்ற இடத்தில் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் வாழ்ந்து வந்தார். அவர் அப்பகுதி மக்களுக்கு விஷமுறிவு தீர்த்தங்கள் வழங்கியும் மூலிகைகளால் வைத்தியம் செய்தும் குணப்படுத்தியுள்ளார்.  https://sadhanandaswamigal.blogspot.com/2012/03/puliyuran-siddhar.html

Approach to Puliyuran Village

Way1: 6Km Every 1 Hrs Jayavilas Mini Bus is stating from Aruppukkottai new bus-stand , Journey time 30-40 mits and  this will be stop at front of temple. .

Way2: 10 Km Own transport from Aruppukkottai on Tiruchuli Road turn from aathipatti to Puliyuran  [via sempatti ]

Google Map link: https://g.co/maps/vxhzn

Get in touch with :

                          Siddhar Sundram : 99657 89200
                          Thambidurai (Madurai) :9443144334


 சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்



"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே "  என்று பாடிய பத்தினது அடிகளைப்போன்றே சர்குர் அவர்களும் வாழ்ந்துள்ளார்கள் .சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருப்புக்கோட்டை நகரில் எண்ணெய் வாணிபம் செய்யும் குடும்பத்தில் தோன்றி , குல வழக்கப்படி வாணிபத்தை சீருடன் புரிந்து , பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்துள்ளார். பின் ஒருநாள் அவருக்கு இறை அருளால் ஞானம் ஏற்பட்டு , தனது அத்துணை  செல்வங்களையும் துறந்து ஞானியாகி விட்டார்.
அவரது ஜீவ சமாதி அருப்புக்கோட்டை நகரிலே , சொக்கநாத சுவாமி , மீனாக்ஷி அம்மை அருள்புரியும் சொக்கலிங்க புரத்திலே அமைந்துள்ளது. ஞானியார் கோவில் என அங்குள்ள மக்களால் அழைக்கப்படும் இக்கோவில் , அமைதியான சூழலிலே அமைந்துள்ளது.



                                                           ஆலயத்தின் முகப்பு  


                                                      சுவாமிகளின் ஜீவ சமாதி 


                  
                                                      சுவாமிகளின் சீடரின் சமாதி 

                                                        சுவாமிகளின் ஜீவ சமாதி


 இந்த ஜீவ சமாதி ஆலயத்தில் காலை , மாலை  என் இரு பொழுதுகளிலும் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திங்கள் கிழமைகளில் இந்த ஜீவ சமாதியில் பால் அபிஷேகம் செய்து ,புது வஸ்திரம் சாத்தி வழிபட்டால் , தொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது  எனக் கூறுகிறார்கள்.


அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் சமாதி



அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலே இருந்து "மலையரசன் கோவில் " என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே , இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இவரை " கும்பகோணம் சுவாமிகள் " எனவும் அழைப்பார்களாம். வெட்ட வெளியிலே , சாலை ஓரத்திலே , நித்ய பூஜைகள் ஏதும் இன்றி , இந்த சமாதி அமைந்துள்ளது. இது சமாதியா அல்லது ஜீவ சமாதியா என்பது தெரியவில்லை.  குறிப்பிட்ட சமுதாயத்தினைச் சார்ந்தவர்கள்  பௌர்ணமி அன்று மட்டும் வந்து வழிபாடு செய்வதாகக் கூறுகிறார்கள். அருகில் உள்ளவர்கள் அவ்வபோது விளக்கு போடுவதாகவும் கூறுகிறார்கள். சமாதியினை சுற்றி உள்ள பகுதிகளையாவது தூய்மை படுத்தி வைக்கலாம்.  


மெட்டுகுண்டுவில்   ஜீவ சமாதி கொண்டு அருளும் 
" அழகர்சாமி சித்தர் "


அமைவிடம் :

விருதுநகர் to அருப்புக்கோட்டை செல்லும்வழியில் பாலவநத்தம் என்னும் இடத்தில் இறங்கவும். அங்கிருந்து புகழ்பெற்ற "இருகங்குடி மாரியம்மன்" கோவில் செல்லும் வழியிலே 4  km தொலைவில் மெட்டுகுண்டு  கிராமம் அமைந்து உள்ளது. அங்கு சென்று "கடப்பாரை சாமி" சமாதி ஆலயம் எனக் கேட்டால்  யாரும் காட்டிவிடுவார்கள்.  

எளிமையான சூழலிலே , யாரும் அணுகும் வண்ணம் அமைந்துள்ளது இந்த ஆலயம். அண்ணன் , தம்பி என் இரு மகான்கள் ஒரே இடத்தில் அடங்கி உள்ளனர்.

 ( ஜீவ சமாதி )
 (விபூதி கொப்பரை)
 ( சித்தர் அருள் பொங்கும் என கொட்டு முரசே ! )
 (அன்னதான கூடம் )
(சரியாக தெரியாத கல்வெட்டுக்கள் )

ஸ்ரீ.ரெட்டி சுவாமியின் ஜீவ சமாதி கோவிலின் வீடியோ

விருதுநகர் மாவட்டம் , அருப்புகோட்டை அருகினில் உள்ள கற்றங்குடி எனும் ஊரினில் அமைந்துள்ள ஸ்ரீ.ரெட்டி சுவாமியின் ஜீவ சமாதி கோவிலின் வீடியோ காட்சியினைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள் ....

katrangudi sri reddi swamiji jeeva samaathi , virudunagar district]


விருதுநகர் மாவட்டம் - செட்டிகுறிசசி விலக்கு

 ஸ்ரீ வீரபத்திர சுவாமி சமாது ஆலயம்


 200 ஆண்டுகள் பழமையான சமாது ஆலயம் 
விருதுநகர் மாவட்டம் , பந்தல்குடியிலிருந்து மதுரை செல்லும் நான்குவழி பிரதான சாலையில் அமைந்துள்ள வாழ்வாங்கி ஊரின் அடுத்து வரும் நிறுத்தம் , செட்டிகுறிச்சி விலக்கு ஆகும். இங்கு சாலையின் மேற்புறம் அமைந்துள்ள மகானின் சமாது ஆலயம் இது ஆகும்.

ஸ்ரீ வீரபத்திர சுவாமி சமாது 
பிரதான சாலையின் மேற்புறம் அமைந்துள்ள ஆலயம் இது. கர்பகிரகம் மட்டும் உள்ள ஆலயம். சிறு விமானம் அமைந்துள்ளது. ஆலயம் முகப்பில் ஸ்ரீ வீரபத்திர சாமி சமாது - வருடம் 1812 என்று செதுக்கப் பட்டு உள்ளது.


இந்த சுவாமி அருப்புக்கோட்டை நகரில் வாழ்ந்து இந்த இடத்தில் ஐக்கியம் அடைந்து இருப்பதாகக் கூறபடுகிறது. தினமும் இங்கே விளக்கு மட்டும் ஏற்றப் படுகிறது. 

2 comments:


  1. *ஸ்ரீலஸ்ரீ அருணாச்சல சுவாமிகள் ஜீவசமாதி*

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலிருந்து சாயல்குடி பெருநாழி செல்லும்வழியில் பரளச்சி, மேலையூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீலஸ்ரீ அருணாச்சல சுவாமிகள் ஜீவசமாதி ஆலயம். இந்த ஆலயம் 350 ஆண்டுகள் மிகப் பழமையானது ஆகும். இங்கு பிரதோஷ வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் கேட்டை நட்சத்திரத்தில் இவரது குருபூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவர் திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர் தன்னுடைய வளர்ப்பு சகோதரியின் மீது கொண்ட அதீத பாசத்தின் காரணமாக மேலையூர் வந்தடைந்தார். அங்கு அரசமரத்தடியில் அமர்ந்து சிவனை நினைத்து பச்சிலை வைத்தியம் செய்து வந்தார் பின்னாளில் சிவனை நினைத்து தவமிருந்து ஜீவசமாதி நிலை அடைந்துள்ளார். இன்றும் இங்கு வைத்தியம் புரிந்து கொண்டிருக்கிறார்.

    ReplyDelete