Monday, July 29, 2019

ஜீவசமாதி அருப்புக்கோட்டை சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள்



சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் 






 அருப்புக்கோட்டை நகரில் , சொக்கலிங்கபுரத்தில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகள் சமாதி ஆலயம். கன்னடம் பேசும் நெசவாளர் வகுப்பிலே சுவாமிகள் அவதரித்துள்ளார்கள். ஏறக்குறைய 160 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமிகள் அவதரித்துள்ளதாகத் தெரிகிறது.
குடும்ப வாழ்வில் இருந்துக் கொண்டே ஆன்மிகத்திலும் உயர் நிலையினை சுவாமிகள்  அடைந்துள்ளார்கள். 
This temple priest explains about the miracles of  Shri.Ujji Swamiji. The video link follows :
https://www.youtube.com/watch?v=c2oprJV3bg8&feature=player_detailpage



ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளின் லீலைகள்


அருப்புக்கோட்டையில் அருளும் ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளின் லீலைகள் 

ஸ்ரீ உஜ்ஜி சுவாமிகளின் சமாதியில் பூஜை செய்யும் திரு.காமராஜர் என்பவர் கூறும்போது 

" சுவாமிகள் அடக்கம் ஆகி தற்போது 95 வருடங்கள் ஆகின்றன. சுவாமிகள் ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்துள்ளார்கள். சுயமாக ஆன்ம ஞானம் பெற்ற சுவாமிகள் , இல்லறத்தார் கடமையையும் தொடர்ந்துள்ளார்கள்.  

அந்நாளில் அவர் வாழ்ந்த பகுதியிலே , ஊர் மக்களின் பயன்பாட்டிற்காய் இரண்டு கேணிகள் தோண்டும் பணியினை , சுவாமிகள் தாமாகவே செய்து உள்ளார்கள்.

தினமும் கேணி வெட்டி முடிந்தவுடன் , கூலி ஆட்களுக்கு பணம் தர வேண்டுமே ? ஆனால் கேணி தொண்டுவோருக்கு கூலி கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் கிடையாது.  என்ன செய்வது ?

தினமும் மாலையில் கூலி கொடுக்கும் நேரத்தில் சுவாமிகள்  தனது தலைப்பாகையில்  கையை  விட்டு பணம் வரவழைத்துக் கொடுப்பார்களாம். 

இதைப் போலவே , அருப்புக்கோட்டை தேவாங்கர் சமுதாயத்திற்காய் ஸ்ரீ சௌடாம்பிகை ஆலயம் எழுப்பும் காலத்தே , சமுதாய பெரியவர்கள் சுவாமிகளிடம் வந்து , ஆலயம் எழுப்பிட சுண்ணாம்பு வேண்டும் எனக் கேட்டு உள்ளனர்.

 சுவாமிகளும் மூன்று கோட்டை  சுண்ணாம்பு தருவதாகக் கூறி, குறிப்பிட்ட நாளில் வரும்படி கூறி அனுப்பியுள்ளார்கள். 

அவர்களும் அந்நாளில் வந்தபோது , சுவாமிகள் மூன்று கோட்டை சுண்ணாம்பைக் கொண்டுசெல்லும்படிக் கூறி உள்ளனர். 

 அவர்களோ .....
" சுவாமி !  தாங்கள் கோபுரம் கட்ட நூறு கோட்டை சுண்ணாம்பு அல்லவா தருவதாகக் கூறினீர்கள் ? நாங்களும் அதை நம்பி அல்லவா வந்தோம் "  என வினவி உள்ளனர். 

 சுவாமியும் தயங்காமல் 
"அப்படியா கூறினேன் ? சரி நீங்கள் மற்றொரு நாளில் வாருங்கள்"
எனக் கூறி ,தானே தனி ஆளாய் சுண்ணாம்புக் காளவாய் அமைத்து , நூறு கோட்டை சுண்ணாம்பையும் கோவில் கோபுர பணிக்குக் கொடுத்து இருக்கிறார்கள்.

நாளும் இறை பணியிலும் , இறை நினைவிலும் காலம் கழித்த சுவாமிகளிடம் , அவரது மனைவி வந்து 
               " நாளும் இறை நினைவிலேயே இருந்தால், நம் உணவிற்கு என்ன வழி ?  இன்று சமைக்கக் கூட ஒன்றும் இல்லை " 
 எனக் கூறி வருந்தி உள்ளார்.

 சுவாமியோ
" அடடா நீ என்ன இப்படி கூறுகிறாய் ?  சமையல் அறை சென்று பார் , சமயல் முடிந்து பதார்த்தங்கள் எல்லாம் தயாராக இருக்கின்றனவே "
எனக் கூறியுள்ளார்கள்.

அவர் மனைவியும் சமையல் அறைக்குள் சென்றுப் பார்த்தால் , அப்போதுதான் சமைத்து இறக்கியதுப் போலே உணவு வகைகள் எல்லாம் சுட சுட இருந்துள்ளன.  தன் தவறை உணர்ந்து அவர் சுவாமியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். 

இன்றளவும் தன்னை நம்பி வருவோரின் துயர் தீர பல வழிகளிலும் அருள் புரிகின்றார்கள் " என பக்தியோடுக் கூறினார். 
thank:
https://bakthi-yugam.blogspot.com/

No comments:

Post a Comment