Wednesday, November 20, 2013

24 குருவாகி ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்

உத்தவ கீதை


கண்ணன் சொன்னது இரண்டு கீதைகள்!
* ஒரு கீதை = பகவத் கீதை!
* இன்னொரு கீதை = உத்தவ கீதை!
முன்னது = வாள் போராட்டத்தின் துவக்கத்தில்! 
பின்னது = வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவில்! 


கண்ணன் சொன்னது...

 24 குருவாகி ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்
 அவர்கள் முறையே:
  1. பூமி
  2. காற்று
  3. ஆகாயம்
  4. நீர்
  5. அக்கினி (நெருப்பு)
  6. சந்திரன்
  7. சூரியன்
  8. மாடப்புறா
  9.  மலைப்பாம்பு,
  10. சமுத்திரம்,
  11. விட்டில் பூச்சி,
  12. தேனீ,
  13. யானை,
  14. தேனெடுப்பவன்,
  15. மான்
  16. மீன்,
  17. பிங்களையெனும் வேசி,
  18. புறா
  19. குழந்தை
  20. குமரி, 
  21. அம்பு தொடுப்பவன், 
  22. பாம்பு,
  23.  சிலந்திப்பூச்சி
  24. குளவி.
பூமி
மனிதம் மிருகம் எல்லோராலும் மிதிபடுகிறது;
தோண்டத் தோண்டத் துன்பம்சகித்துக் கொள்கிறது;
மற்றவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தருகிறது இந்த
மண் என்ற 

இதுவே எனது முதல் குரு; மக்கள் வருத்தியதை மண்மாதா மறக்கிறாள்;
மாறாக நெல் கனி பல தருகிறாள்; துன்பம் தருவோருக்கு
இன்பம் தரவேண்டுமென்பது இப்பூமியிடமிருந்து நான் கற்ற பாடம்;
உபத்திரவம் செய்வோர்க்கும் உபயோகமாய் இருப்பதே இதன்
உள்ளர்த்தம்;

வாயு, உடலென்ற நாம் வாழ உறுதுணையாயிருக்கிறது; 
உடல் இன்ப துன்பத்தில் சிக்குண்டாலும், பணம் பொருள் மேல்
பற்றுகொண்டாலும் வாயு என்ற ஆத்மா இதிலெல்லாம் அகப்படாமல் 
தனித்திருக்கிறது;  அதுபோல் ஞானம் வேண்டுபவன் தேவையில்லாத பொருட்கள் மேல் 
சிந்தை கொள்ளது தனித்திருக்கவேண்டுமேன்பது வாயு எனக்கு வழங்கியப் பாடம்.

ஆகாயம் எங்கும் நிறைந்துள்ளது;அளவிட முடியாதது;
எதனோடும் எள்ளளவும் தொடர்பு இல்லாதது;
அதுபோல் ஆன்மாவும் தனித்து ஒரே நிலையில் இருக்கவேண்டுமேன்மது 
ஆகாயம் எனக்கு அறிவித்த பாடம்.

தண்ணீர் 
தனக்கென்று ஓர் நிறமற்றது;...... https://uddhavagitatamil.blogspot.com/2013/11/2.html


No comments:

Post a Comment