Tuesday, June 12, 2012

சகஜமார்கதில் சும்மா இருக்கும் சுகம்..




தியான அனுபவத்தில் ஒளி தரிசனம் கிடைக்கும்போது. நான் என்ற a மற்றும் ஒளி என்ற b போன்று இரண்டு பொருள்கள் இருக்கும். பின்னர் நான் என்ற உடம்பு நிலை மறைந்து ஒளி மட்டுமே தெரியும். இப்போது a மறைந்து விட்டது. b என்ற ஒளி மட்டும் இருக்கும். a , b யில் மறைந்து விடும்.  பின்னர் b என்ற ஒளிநிளையும் மறைந்து போகும். இப்போது a மற்றும் b  இரண்டுமே மறைந்துவிடும். இப்போது அங்கே உள்ளும் இல்லை வெளியும் இல்லை. இருட்டும் இல்லை பகலும் இல்லை . அங்கே மனிதனும் இல்லை மிருகமும் இல்லை. அங்கே சத்தமும் இல்லை அமைதியும் இல்லை. அங்கே மேலும் இல்லை கீழும் இல்லை. இதுவே சும்மா இருக்கும் இடமாகும். இது தியான அனுபவம் ஆகும்.

      இதை சகஜ மார்கத்தில் எப்படி செயலாக்குவது. ஆன்மா தான் ஆனந்தம் , திருப்தி,  முழுமை பெற்ற அறிவு என்று அறியாமையால் வெளியில் ஆனந்தத்தை,திருப்தியை, முழுமை அறிவை என்று வெளியே தேடியலை கிறது . அதனால் பல தடவை கூடு கட்டி பல பிறவி எடுக்கிறது. அதனால் மாயையாக பல துன்பங்களை அனுபவிக்கிறது. பின்னர் தியானத்தில் தன்னுள்ளே சென்று தேடி கொண்டிருந்தது. முடிவு கிடைக்க வில்லை. தனக்குள் தன்னை தவிர யாரும் இல்லை என்று புரிந்து கொண்டதது. தனக்குள் தன்னை தவிர வேறு யாரும் இல்லை என்று தெரிந்த பிறகு அங்கே தன்னை தேடும் முயற்சி,அதாவது  ஆனந்தம்,திருப்தி,முழுமை அறிவு என்பதை தேடும் முயற்சியை நிறுத்திவிடுகிறது.

          தேடுதல், ஆராய்ச்சி இல்லாமல் இருந்தால், தேடுதல் என்ற எண்ணம் இல்லா எண்ணம் அற்ற நிலையில் இருந்தால் தான் ஆனந்தம் ,திருப்தி,முழுமை அறிவு என்ற தெளிவு ஏற்படும். அதனால் எண்ணம் அற்ற நிலையில் இரவு பகல் ஏது? உள்ளே வெளியே ஏது ? மனிதன் மிருகம் ஏது ? மேலே கீழே ஏது ? சத்தம் அமைதி ஏது ?இன்பம் துன்பம் ஏது?. இந்த இடமே  சும்மா இருக்கும் சுகமாகும். தான் தானாய் நின்ற இடம் ஆகும். இதுவே சகஜ மார்கமாகும்.

          தனிலே இருந்த ஒன்றை நான் அறிந்ததிலையே
          தன்னிலே இருந்த ஒன்றை நான் அறிந்தபின்
          தன்னிலே நான் இருந்து ஓம்புகின்றேனே .....  சிவவாக்கியர்

          நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
          நினைக்கிலேன் மறக்கிலேன் ......  சிவவாக்கியர். -----  நினைக்கவும் இல்லை , மறக்கவும் இல்லை என்ற எண்ணமற்ற நிலையில் இருந்தால் சும்மா இருக்கும் சுகத்தை பெறலாம்.




No comments:

Post a Comment