Thursday, August 4, 2016

அருணாசலபுராணம்பாகம் 3 arunachalapuranam3

அருணாசலபுராணம்:
பாகம் 5:

நந்திதேவர் விரிஞ்சிபுரம் , காளத்தி , ஆகிய தலங்களின் மகிமையை கூறிய பின்பு தொடர்கிறார்.

பெரிய சங்குகள் முழங்குகின்ற வைகை ஆற்றின் கரையிலே அமைந்த தலம் ஒன்று உண்டு. அத்தலத்திலே அழகே வடிவாய் சோமசுந்தரக்கடவுளாய் ஈசன் 64 திருவிளையாடல்களை செய்த இத்தலத்தின் பெருமையை யாராலும் கூற இயலாது.

தென்சமுத்திரக்கரைனில் பிரவிப்பினியை போக்குகின்ற தலமொன்று உண்டு. போரினை ஒரு விளையாட்டை போல் செய்யும் இராமபிரான்
இராவணனை கொன்ற பாவம் தீர ஈசனை வழிபட்ட இராமேஸ்வரம் என்னும் தலமொன்று உண்டு. இத்தலத்தில் பிறந்தாலும் இறந்தாலும் இத்தலத்தை தரிசித்தாலும் அவர் பாவங்கள் கரைந்து பரிசுத்தமான வீடு பேறு அடைவர் . மேலே கூறிய அனைத்து தலங்களுக்கும் சென்று பிரகாசமே சொரூபமான பரமேஸ்வரனுக்கு தூய்மையான நீரினால் அபிஷேகம் செய்தாலும் , திரவியஙகள் செலவு செய்து கோவில்கள் கட்டினாலும் , விரிந்த பூஞ்சோலைகள் அஉமைத்தாலும் , உத்தமமான பரகதி அடைந்து பரமேஸ்வரனை சென்றடைவர். இதைக்கேட்ட முனிவர்களும் மார்கண்டேயரும் ஆனந்த முற்று பேசலானார்.


அருணாசலபுராணம்
 தொடரும்...
அண்ணாமலையெம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி.
அண்ணாமலையாருக்கு அரோகரா.
- சிவனடி சிவகேணசன்.
அருணாசலபுராணம் 

அருணாசலபுராணம்பாகம்6:
நந்திதேவர் கூறிய திருவாரூர், சிதம்பரம் , காசி, காஞ்சிபுரம், ஸ்ரீசைலம், காளஸ்திரி, மதுரை , திருக்கேதாரம்,விரிஞ்சிபுரம்,விருத்தாச்சலம், திருவானைக்காவல், கும்பகோணம், திருவிடைமருதூர்,மற்றும் கங்கை நதி உள்ளிட்டவற்றின் சிறப்பை கேட்டறிந்த சனகாதி முனிவர்களும் மார்கம்டேயரும் நந்தி தேவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.
மார்கண்டேயர் பேசத் தொடங்குகிறார். தேவரீர் மேலே கூறிய சிறப்பு பொருந்திய அவ்வூர்களுக்கும் நதிகளுக்கும் சென்று அபிஷேகங்கள் செய்து நீராடி திருக்கோயில்கள் கட்டி வணங்குதல் என்பது முனிவர்களாளும் தேவர்ளாளும் சித்தர்களால் மட்டுமே முடியும். மின்னல் போன்று தோன்றி முடியும் சதாரன மனித வாழ்க்கையில் முடியாத ஒன்று ஆடும்.
அப்படியே மனிதர்களால் முடிந்தாலும் நடக்க முடியாத கை கால்கள் செயல் இழந்தவர்களால் நிச்சயமாக இந்த மோட்சம் பெறும் வழியை அடையவே முடியாது.
மேலும் இந்த பூலோகத்தில் பிறந்த செடி கொடி மரம் புழு பூச்சகள் ஆகியவையோல்லாம் எவ்வாறு இத்துனை இடங்களுக்கு சென்று தரிசிப்பது.
எனவே நந்தி தேவரே இந்த அகிலத்தில் பிறந்த உயிருள்ள மற்றும் மரம் செடி கொடி போன்றவை வீடு பேறு அடையும் பொருட்டு மேலே கூறிய அத்துனை சிறப்புகளும் ஒரே தலத்தில் அமையுமாறு ஒரு தலத்தை படைத்தருள வேண்டுகிறோம் அய்யா ஓம் நந்திதேவரே போற்றி ஓம் நமசிவாய என்று மார்கண்டேயருடன் சனகாதி முனிவர்களும் வேண்டினர்.
இதைக்கேட்ட நந்திதேவர். சற்றே நமட்டுச் சிரிப்புடன் பதில் கூறத் தொடங்கினார்.
- தொடரும்

No comments:

Post a Comment