Friday, August 23, 2019

சும்மா 2 -- எஸ்.ஜெயபாரதி

சும்மா #2

வித்யாலங்கார
சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

 

    இந்த "சும்மா" என்ற சொல்லில் அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது?

    ஒரு பொ¢ய விசேஷம் உண்டு.

    உண்மையிலேயே அதனுடைய அர்த்தம் சொல்லிலோ அல்லது வாக்கியத்திலோ அடங்கிவிடமாட்டாது.

    இதை விளக்க வேண்டுமானால் உள்ளத்தின் அமைப்பையும், எண்ணங்களின் பிறப்பையும் சிறிதாவது உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.

    முதலில் உள்ளத்தின் அமைப்பை நோக்குவோம்.

    பண்டைய இந்திய வல்லுனர்கள், உள்ளத்தில் நான்கு கூறுகள் இருப்பதாகக் கண்டனர். மனசு, சித்தம், புத்தி, அஹம்காரம் எனபவையே அவை.

மனசு:
"மனசு" - புலன்களின் வாயிலாக வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் தகவல்களையும் இது வாங்கி, உடலின் இயக்கங்களோடு தொடர்பு படுத்தும். அதனிடம் வந்து சேரும் உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவகையில் அது மாறிக்கொண்டே இருக்கும். பல நூற்றுக்கணக்கான தாக்கங்கள் அதற்கு ஏற்பட்டுக்கொண்டேயிருப்பதால் அது சதா சலனத்திலேயே இருக்கும்.

நினைவுகள் மனசுக்கு வந்து சேர்ந்து, மனசில்தான் பரவி, விரவி, மின்னி, மறையும். அதனிடம் வந்து சேரும் தாக்கங்களையும் தகவல்களையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பகுத்து ஆயும் ஆற்றல் அதனிடம் இல்லை. முடிவுகளை எடுக்கும் தன்மையும் கிடையாது. மனசில் வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் ஒருவித primitive நிலையில்தான் மனசு எடுத்துக்கொள்ளும்.

ஏதோ ஒரு நல்லது,கெட்டது, இன்பமானது, ஆபத்தானது, துன்பமானது என்ற அளவில்தான் எடுத்துக்கொள்ளும். மூளையின் Reptilian Brain பகுதியும் ஓரளவிற்கு இந்த மாதி¡¢தான்.

மனசு என்பது நம்முடைய எண்ணங்களின் வெளிப்படையான நிலைக்களன். அங்குதான் எண்ணங்களின் ஆக்கம் முழுமையாக வெளியில் தொ¢யும். நாம் முழு உணர்வுடன் விளங்கும் full-conscious stateஐ மனசு manifest செய்கிறது.

மனசு, உணர்ச்சிகளாலும் பாவங்களாலும்(EMOTIONS and not sins) எளிதாக இழுத்தடிக்கப்படவும், உந்தப்படவும், உதைக்கப்படவும் கூடியது.

"சித்தம்" என்பது சற்று சிக்கலானது. உணர்வுகள், நினைவுகள், ஞாபகம், போன்றவற்றின் அடித்தளம். இங்கிருந்துதான் எண்ண அலைகள் மேலே எழும்பி மனசுக்கு வரும். ஆற்றின் அடிமட்டத்தில் அமைந்துள்ள ஆற்றுப்படுகைதான் சித்தம் என்று கொண்டோமானால், அதன்மேல் ஓடும் ஆற்று நீரோட்டம், அதில் உள்ள சுளிப்புகள், சுழற்சிகள், அலைகள், குமிழிகள் போன்றவை மற்ற அம்சங்களாகிய மனசு, அஹம்காரம் போன்றவை.

This is a huge pool of sensory impressions and data.

உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் எண்ண எழுச்சிகளும் இங்கிருந்துதான் மனசுக்கு வரும்.

அதே சமயத்தில் எந்தவித தூண்டுதலும் இல்லாத போது, தன்பாட்டுக்குக் குமிழிகளைப்போல் நினைவுகளையும் ஞாபகங்களையும் fantasy எனப்படும் பகற்கனவுகளையும் மேலே அனுப்பும். அவை மனசின் மேற்பரப்பில் குமிழிகளாகத் தோன்றி வெடித்துச் சிதறி மறையும்.

சில சமயங்களில்,

"அந்த நாள் ஞாபகம் இந்த நாள் வந்ததே!
நண்பனே!
நண்பனே!
நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே?
அது ஏன்? ஏன்? ஏன்?
நண்பனே!"

என்று சிம்மக்குரலெடுத்துப் பாட வைக்கும்.

"அஹம்காரம்"-

சாதாரணமாக இதை வேறு பொருளில் கொள்வார்கள். ஏதோ திமிர் சம்பந்தப்பட்டது போலத் தோன்றும். அவ்வாறல்ல.

"நான்" என்னும் தன்மைதான் அஹம்காரம்.

நம்முடைய ஆன்மா பல பிறவிகளை எடுக்கிறது அல்லவா? ஒவ்வொரு பிறவியிலும் அது தான் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல், தொடர்புகள், உறவுகள், விருப்புகள்,வெறுப்புகள், அடையாளங்கள் முதலியவற்றை வைத்துத் தன்னையே "தான்", "நான்","எனது" என்று தன்னிலைப்படுத்திக் கொள்ளும். அந்தப் பிறவியில் அந்தக் குறிப்பிட்ட தன்மைகளே சாஸ்வதமானவையாகவும் நிச்சயமானவையாகவும் தோன்றும். ஆனால் அதன் முற்பிறவியில் முற்றிலும் வேறு தன்மைகளையும் அடையாளங்களையும் கொண்டதாக விளங்கியிருக்கும். மனிதனாகவே பிறந்தாலும் கூட ஊர், பேர், உறவு, சொந்தபந்தம், விருப்புவெறுப்பு, ஆற்றல், படிப்பு, இனம், மொழி,என்றவாறு முற்றிலும் மாறுபட்ட கூறுகளைக் கொண்டதாக அந்தப் பிறவி விளங்கக்கூடுமல்லவா?

அடுத்த பிறவியிலோ இன்னும் வேறு நிலைமைகள் விளங்கலாம்.

ஆனால், ஒரே ஆன்மாதான் இத்தனை பிறவிகளில் வேறு வேறு அடையாளங்களுடன் விளங்குவதை அந்த ஆன்மா உணரமாட்டாது. அதையெல்லாம் அஹம்காரம் மறைத்துவிடும். இந்த அஹம்காரமே ஒட்டுமொத்தத்தில் பிறவியெடுத்துள்ள ஆன்மாவை இறைவனிடத்திலிருந்து தனிமைப்படுத்திவிடும்.

"அதாண்டா, இதாண்டா, அருணாசலம் நான்தாண்டா"

என்று தன்னையே எல்லாமாக அறிந்து, எல்லாவற்றிலும் தன்னையும், தன்னில் எல்லாவற்றையும் கண்டு, தானே அந்த அருணாசல பரசிவமான பிரம்மம் என்ற பிரம்மஞானமெல்லாம் ரஜினியைப் போன்ற SUPERMANனுக்கே தோன்றக்கூடும்.

"புத்தி" என்பது பகுத்து அறிவது, உணர்வுகளை அலசுவது, நல்லது/கெட்டது, நியாய அநியாயங்கள் போன்றவை, மனசாட்சி, சித்தாந்தங்கள், தீர்மானங்கள், தர்க்கங்கள், நிச்சயங்கள் போன்றவற்றை நடத்தும். நாம் அறிவுபூர்வமாகச் செய்யவேண்டிய நடவடிக்கைகளை ஆணைகளாக்கி மனசுக்கு அனுப்பும்.மனசின் ஓட்டங்களை அனுமானிப்பது, அளவெடுப்பது, கவனிப்பது, கட்டுப்படுத்துவது எல்லாம் செய்யும். நம்முடைய சுற்றுச் சூழல்களுக்கு ஏற்ற விதங்களில் நம்முடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொடுக்கும். அழகுணர்வு, இசை ரசனை,போன்றவற்றின் இருப்பிடம்.

சில சமயங்களில் உணர்ச்சிபூர்வமான தாக்கங்களுக்கு புத்தி அடங்கிவிடும். சில சமயங்களில் பழக்கவழக்கங்களாலும், ஆழமாக விதைக்கப்பட்ட நம்பிக்கைகளாலும் முடக்கப்பட்டு விடும். ஆனால் புத்தியால் இவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

இதையெல்லாம் யோக சாத்திரத்தில் காணலாம். ஆனால், பதஞ்சலி முனிவர், தன்னுடைய அஷ்டாங்க யோக சம்பந்தத்தில் இந்த நான்கினையும் கூறவில்லை. அவர் ஒட்டுமொத்தத்தில் "சித்தம்" என்ற ஒரே சொல்லை மட்டுமே பயன்படுத்துகிறார்.

"யோகாஸ் சித்த வ்ருத்தி நிரோதஹ",

என்று மாத்திரம் ரத்தினச்சுருக்கமாகக் கூறிவிட்டார்.

பல்வேறு காலங்களில் எழுதியுள்ள பல்வேறு அறிஞர்கள், "சித்தம், "மனது" என்பனவற்றுக்குப் பலவகையான பொருள்வேறுபாடுகள் ஏற்படச் செய்திருக்கிறார்கள்.)

ஆகமொத்தத்தில் உள்ளத்தில் இவ்வளவும் இருக்கிறது.

எண்ணங்களின் தோற்றம் ஏற்படுவதைக் கவனிப்போம்.
 

No comments:

Post a Comment