Saturday, November 22, 2014

மதுரை திருப்பரங்குன்றம் சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி திருப்பணி


சற்குருநாதர் துணை

அருள்மிகு சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி திருப்பணி


நாள்: 24.11.2014 திங்கள் கிழமை              நேரம்:  காலை 11.20க்கு மேல் 12.00 மணிக்குள் 

பேரன்புடையீர்,

மதுரை திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) அருள்மிகு சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியில் வருகிற 2015ம் ஆண்டு ஆனி மாதத்தில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.  திருப்பணிக்கான பூமிபூஜை நிகழும் ஜய ஆண்டு கார்த்திகை மாதம் 8ம் நாள் 24.11.2014 திங்கள் கிழமை சோமவாரத்தன்று காலை 11.20க்கு மேல் 12.00 மணிக்குள் அருள்மிகு சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதியில் நடைபெற உள்ளது. 

அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் திருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

என்றும் அன்புடன்,
இரா. தட்சணாமூர்த்தி 
பரம்பரை டிரஸ்டி - 5ம் தலைமுறை
சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம் 
செல்: 94422 72220, 98421 24841
-----------------------------------------------------------------------------------------------------------------
If you are willing to donate please find the below details
A/c Name   :  SOOTTUKKOLE RAMALINGA VILASAM  A/c No :  30019562321
Bank          :  State Bank of India, Pasumalai Branch  IFSC Code  :  SBIN0002254
------------------------------------------------------------------------------------------------------------------

R. Dhakshanamoorthy
Secretary - 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai), Thiruparankundram
Madurai - 625 005. Tamil Nadu, INDIA ,Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com   Website: www.soottukkole.org

Wednesday, November 19, 2014

விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்


விபஸ்ஸனா என்றால் என்ன?
விபஸ்ஸனா, உண்மையான மன-அமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான ஒரு வழிமுறையாகும். தன்னைத்தானே ஆராய்வதன் மூலம் மனதைத் தூய்மையடையச் செய்யும் படிப்படியான செயல்முறை இது.

விபஸ்ஸனா இந்திய நாட்டின் தொன்றுதொட்ட தியான வழிமுறைகளில் ஒன்று ஆகும். விபஸ்ஸனா என்ற சொல்லுக்கு 'உள்ளதை உள்ளபடி பார்த்தல்' என்று பொருள். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் இந்த முறையை மீண்டும் கண்டறிந்து, இதை உலகத்தின் அனைத்து பிணிகளையும் நீக்கும் அருமருந்தெனவும், இதுவே வாழும் கலை எனவும் போதித்தார்.

இந்த தியான முறை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, பிரிவையோ சார்ந்திராதது. உள்ளத்தின் மாசுகளை அறவே நீக்கி, மோட்சப் பெருநிலை அடைவதே இந்த தியான முறையின் உயரிய குறிக்கோள். உடல் நோய்களை நீக்குவதோடு நில்லாமல் மனிதர்களின் துன்பங்களை அறவே நீக்கி பூரண சுகம் அளிப்பதே இதன் நோக்கம்.

இது உடம்பிற்கும் மனதிற்கும் உள்ள ஆழமான தொடர்பை மையமாகக்கொண்டு செயல்படுகிறது. உடலையும் மனதையும் தொடர்ந்து இணைக்கக்கூடியவை உடலில் தோன்றும் உணர்ச்சிகள். உடலை உயிருள்ளதாக அறியவைப்பதும் உடலில் தோன்றும் உணர்ச்சிகள்தான். அதனால் உடல் உணர்ச்சிகளை நெறிமுறையோடு கவனிப்பதன் மூலம் உடலிற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை நேரடியாக அறியமுடிகிறது. தன்னைத்தானே கவனித்து, தன்னைத்தான் ஆராய்ந்து மனதிற்கும் உடலிற்கும் உள்ள பொதுவான வேரை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணம் மனதின் மாசுகளைக் கரைக்கிறது. அன்பும் கருணையும் நிறைந்த மனநிலையை ஏற்படுத்துகிறது.

ஒருவரின் எண்ணங்கள், மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் சீர்தூக்கி ஆராயும் குணம் எவ்வாறு அறிவியற்பூர்வமான விதிகளுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பது இந்த தியான பயிற்சி மூலம் தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. ஒருவர் எவ்வாறு மேம்படுகிறார் அல்லது பின்நோக்கிச் செல்கிறார், எவ்வாறு ஒருவர் துன்பங்களை ஏற்படுத்துகிறார் அல்லது துன்பங்களிலிருந்து விடுபடுகிறார் ஆகியவற்றின் இயல்பு நேரடி அனுபவத்தின் மூலம் புலனாகிறது. இந்த தியான பயிற்சி மூலம் வாழ்க்கையில் கூடுதலான பிரக்ஞை, மாயையின்மை, சுய-கட்டுப்பாடு மற்றும் அமைதி ஆகியவை வாய்க்கின்றன.இவை அல்ல விபஸ்ஸனா

இது கண்மூடித்தனமான ஒரு சடங்கோ, வழக்கோ அல்ல
இது அறிவை வளர்க்கும் ஓர் ஆட்டமோ, தத்துவ விளையாட்டோ அல்ல
இது ஓய்வு எடுக்கவும், விடுமுறையைக் கழிக்கவும், பலரைச் சந்தித்து பழகவும் ஏற்பட்ட ஒரு வாய்ப்பு அல்ல.
இது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்து ஓட ஒரு வழியும் அல்ல


இதுதான் விபஸ்ஸனா

இது மனத்துயர்களை வேரோடு அழிக்கும் ஒரு வழிமுறை ஆகும்
இது சமுதாயத்திற்கு நற்பணிகள் ஆற்ற உதவும் வாழும் கலை ஆகும்
இது வாழ்வின் இன்னல்களை அமைதியுடனும் சமநோக்குடனும் எதிர்கொள்ளும் வண்ணம் மனதைத் தூய்மைப்படுத்தும் முறை ஆகும்


பாரம்பரியம்

விபஸ்ஸனா புத்தபெருமான் காலத்திலிருந்து தொடங்கி இடையீடின்றி வழிவழியாக ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு இன்று வரை நிலைத்துள்ளது.

இதன் தற்போதைய ஆசிரியர் திரு சத்திய நாராயண் கோயன்கா அவர்களின் மூதாதையர்கள் இந்தியர்களாக இருந்த போதிலும், இவர் மியன்மார் (பர்மா) நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அங்கு இருக்கையில் அவர், உயர் அரசாங்க அதிகாரியாக பதவி வகித்து வந்த சயாக்யி ஊ பா கின் அவரிடம் விபஸ்ஸனா பயிலும் நல்வாய்ப்பைப் பெற்றார். தம் ஆசிரியரிடம் பதினான்கு ஆண்டு காலம் பயின்ற பின், 1969 ஆண்டு முதல் அவர் இந்தியாவில் தங்கி விபஸ்ஸனா பயிற்றுவித்து வருகிறார். கீழை மற்றும் மேலை நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இன-மத பாகுபாடின்றி அவரிடம் பயின்று வந்துள்ளனர். விபஸ்ஸனா பயில பெருமளவில் மக்கள் ஆர்வம் காட்டுவதை அறிந்து அவர் 1982 முதல் தனக்கு உதவியாக துணை-ஆசிரியர்களையும் நியமித்து வந்துள்ளார்.குறிக்கோள்

விபஸ்ஸனா தன்னைத் தானே ஆராய்வதின் மூலம் மனத்தூய்மை அடைய ஒரு வழி. ஒருவர் முதலில் தம் மூச்சுக்காற்றின் மீது கவனம் செலுத்தி மனதை ஒருநிலைப்படுத்துகிறார். பின் கூர்மையடைந்த மனதுடன் தன் உடல் மற்றும் உள்ளத்தில் எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைக் கவனித்து, அதன் மூலம் நிலையாமை, துக்கநிலை மற்றும் சாரமின்மை ஆகிய உலகப்பொதுவான உண்மைகளை உணர்ந்தறிகிறார். இவ்வாறு பேருண்மையை நேரடியாக உணர்ந்தறிவதில் மனம் தூய்மை அடைகிறது.

மனமாசுகளிலிருந்து முழு விடுதலை அடைதலும், அகத்தெளிவு பெறுதலும் விபஸ்ஸனா தியான முறையின் உயரிய குறிக்கோள்கள் ஆகும். உடற்பிணிகளை நீக்குவது இதன் நோக்கமல்ல. ஆயினும் மனம் தூய்மை அடைவதன் பயனாக மனநிலை சம்பந்தப்பட்ட பல நோய்கள் குணமடைகின்றன. சொல்லப்போனால், விபஸ்ஸனா மனத்துயர் எழக் காரணமான விருப்பு, வெறுப்பு, அறியாமை என்ற மூன்றையுமே அழிக்கிறது. தொடர்ந்த பயிற்சியினால் இந்தத் தியான முறை அன்றாட வாழ்வில் ஏற்படும் மன-இறுக்கத்தைத் தளர்த்துகிறது. விரும்பத்தக்க அல்லது வெறுக்கத்தக்க சந்தர்ப்பங்களை சந்திக்க நேரும்போது சமநிலை இழக்கும் மனதின் பழைய பழக்கத்தினால் விளைந்த முடிச்சுகளை இது அவிழ்க்கிறது.யார் பயிலலாம்?

தன்னைத் தானே ஆராய்வதன் மூலம் நிலையாமை, துக்கநிலை மற்றும் சாரமின்மை ஆகிய உலகப்பொதுவான உண்மைகளை உணர்ந்தறிந்து மனத்தூய்மை அடைவதே 'விபஸ்ஸனா' முறையாகும். இந்த பாதை முழுக்க முழுக்க அனைவருக்கும் பொதுவானது. யாவருக்கும் பொதுவான நோய்களுக்கு யாவருக்கும் பொதுவான மருந்தாக அமைவது. இது எந்த ஒரு மதத்தையோ, இனப்பிரிவையோ சாராதது. எனவே, இன-குல-மத வித்தியாசங்கள் இன்றி யாவரும் எங்கும் எப்போதும் இதைப் பயிற்சி செய்யலாம். அனைவர்க்கும் இது சம அளவில் பயனளிக்க வல்லது.

இந்த தியான முறையை புத்தர் தோற்றுவித்திருந்தாலும், இதை புத்த மதத்தினர் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற விதி எதுவும் கிடையாது. மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக மக்கள் யாவரும் ஒரே வகையான பிரச்சினைகளை எதிர்கொள்வதால், அப்பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் முறையும் அனைவர்க்கும் பொதுவானதாகவே இருக்கவேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டே இந்த தியான முறை செயல்படுகிறது. பல மதங்களை சேர்ந்த பலதரப்பட்ட மக்கள் விபஸ்ஸனா முறையின் பயன்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும் இந்த தியான முறைக்கும், தம் தொழில் அல்லது சமய நம்பிக்கைகளுக்கும் முரண்பாடு ஏதும் உள்ளதாக கண்டதே இல்லை.

அக-ஆராய்வின் மூலம் மனதை தூய்மைப்படுத்தும் இந்த முறை சுலபமானது அன்று. பயிற்சி பெறுபவர்கள் கடும் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். அவரவர் தம் சொந்த முயற்சியினால் தமக்கே உரிய இயல்புகளை புரிந்துகொள்ள வேண்டி இருக்கும். வேறு யாரும் அவர்களுக்காக இதை செய்ய முடியாது. ஒழுக்க நெறியைக் கடைபிடித்து, மிகுந்த ஈடுபாட்டுடன் முயற்சி செய்ய வல்லவர்களுக்கே இந்த முறை ஒவ்வும்.

விபஸ்ஸனா தியான முறை தம் மனம் சார்ந்த குறைபாடுகளை குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையுடன் சில தீவிர மன-நோயாளிகள் இந்தப் பயிற்சி பெற வந்துவிடுகின்றனர். நிலைப்பட்டு பிறருடன் பழக இயலாமை மற்றும் பல்வேறு குணப்படுத்தும் முறைகளை பின்பற்றியதாலான விளைவுகள் ஆகியவை இத்தகைய நோயாளிகள் பயனடைவதைக் கடினமாக்குகின்றன. சிலருக்கு பத்து நாட்கள் பயிற்சியை முடிப்பதுகூட கடினமாக உள்ளது. நாங்கள் தொழில் அடிப்படையில் இன்றி, தாங்களாகவே முன்வந்து சேவை புரிபவர்களைக் கொண்டே பயிற்சி முகாம்களை நடத்துவதால் இத்தகைய பின்னணி கொண்ட பிணியாளர்களை முறைப்படி கவனித்துக் கொள்வது இயலாததாகிறது. விபஸ்ஸனா தியான முறை பெரும்பாலானவர்களுக்கு நற்பயன் விளைவிக்கக் கூடியதே ஆயினும், அது மருத்துவ அல்லது மனச் சிகிச்சைக்கு மாற்றாக அமையாது. எனவே, நாங்கள் தீவிர மன-நோயாளிகளுக்கு இந்த முறையை அறிவுறுத்துவதில்லை.


பயிற்சி முறை

இந்த தியான முறை பத்து-நாள் பயிற்சி முகாம்கள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அது சமயம் பயிற்சி பெறுவோர் பயிற்சி பெறும் இடத்திலேயே தங்கியிருந்து, பரிந்துரைக்கப்பட்ட ஒழுக்க நெறியை தவறாது பின்பற்றி, தியான முறையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, முறையாகவும், தேவையான அளவும் பயிற்சி செய்ய பத்து நாட்களுக்குள்ளேயே நற்பலன்களை அனுபவிக்க ஆரம்பிப்பர்.

பயிற்சி பெறுவோர் ஈடுபாட்டுடன் கடுமையாய் பயிற்சி செய்ய வேண்டி இருக்கும். மூன்று நிலைகளை கொண்டது இந்த பயிற்சி. 'சீல', அதாவது நன்னடத்தை, என்பதே இந்த முறையின் அடித்தளம் ஆகும். சீலத்தின் அடிப்படையில் எழும் மன-ஒருநிலைப்பாட்டிற்கு 'சமாதி' என்று பெயர். அக-ஆராய்வினால் விளையும் ஞானத்திற்கு 'பஞ்ஞ' என்று பெயர். இந்த ஞானத்தின் மூலமே ஒருவர் மனத்தூய்மை அடைகிறார்.

முதன்மையாக, பயிற்சி நடக்கும் பத்து நாட்களும் எந்த உயிரையும் கொல்லுவது, எந்த பொருளையும் திருடுவது, பாலியல் உறவுகள் கொள்வது, தவறாக பேசுவது மற்றும் போதை ஊட்டும் பொருட்களை உட்கொள்வது ஆகிய செயல்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இந்த எளிய அறநெறி, உள்ளத்தை அமைதிபடுத்தப் பெரிதும் உதவுகிறது. இல்லையேல், தெளிவாகத் தன்னைத் தான் கவனிக்க இயலாது மனம் அலைபாய்ந்துகொண்டு இருக்கும்.

ஒருவர் இடைவிடாது தன் மூச்சுக்காற்றின் போக்கின் மீது தன் முழு கவனத்தையும் நிலைநிறுத்தி, அதில் இயல்பாக நிகழும் பல மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் தன் மனதின் மேல் உள்ள கட்டுப்பாட்டை ஓரளவு வளர்த்து கொள்வது இரண்டாம் நிலை.

நான்காம் நாள் வருவதற்குள் மனம் பெரிதும் அமைதி பெற்று, கூர்மையுற்று விபஸ்ஸனா பயிற்சி தொடங்கத் தேவையான திறனை அடைகிறது. உடலெங்கும் புலனாகும் உணர்ச்சிகளை உணர்ந்தறிந்து, அதன் தன்மைகளைப் புரிந்துகொண்டு, எதிர்வினைகளை ஏற்படுத்தாது, சமநோக்கை வளர்த்துக்கொள்வதே இந்த பயிற்சி.

இறுதியாக, கடைசி நாள் அன்று, பத்து நாட்களில் பெருகிய மனத்தூய்மையை அனைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வண்ணம் அனைவரிடமும் நல்லுறவு வளர்க்கும் 'பேரன்பு தியான முறை' பயிற்சியுடன் முகாம்கள் நிறைவடையும்.

மூச்சு மற்றும் உடலோடு இணைந்த உணர்ச்சிகளை கவனிக்கும் செயல்முறை பற்றிய சிறு விடியோ படம் (5.7 மெகா பைட்டுகள்) 'க்விக்டைம் மூவி ப்ளேயர்' துணைகொண்டு காணலாம். இம்முழுபயிற்சியும் உண்மையிலேயே மனதிற்கு தரப்படும் பயிற்சியாகும். நாம் உடல் நலம் பெற உடற்பயிற்சி செய்வதைப்போன்றே, மனநலம் பெற செய்யும் பயிற்சியே விபஸ்ஸனா தியான முறை ஆகும்.


கால அட்டவணை
பயிற்சியின் தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு பின்வரும் கால அட்டவணை வரையப்பட்டுள்ளது. சிறந்த பயனை பெற மாணவர்கள் முடிந்தவரை இந்த அட்டவணைப்படி தவறாது காலத்தை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலை 04.00 மணிவிழித்தெழுதல்
காலை 04.30 முதல் 06.30 வரைதியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
காலை 06.30 முதல் 08.00 வரைகாலைச்சிற்றுண்டி இடைவேளை
காலை 08.00 முதல் 09.00 வரைதியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
காலை 09.00 முதல் 11.00 வரைதியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
காலை 11.00 முதல் நண்பகல் 12.00 வரைபகல் உணவு
நண்பகல் 12.00 முதல் மாலை 01.00 மணி வரைஓய்வு அல்லது ஆசிரியருடன் நேர்காணல்
மாலை 01.00 முதல் 02.30 வரைதியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
மாலை 02.30 முதல் 03.30 வரைதியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
மாலை 03.30 முதல் 05.00 வரைதியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
மாலை 05.00 முதல் 06.00 வரைதேநீர் இடைவேளை
மாலை 06.00 முதல் 07.00 வரைதியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
மாலை 07.00 முதல் இரவு 08.15 வரைதியானக்கூடத்தில் ஆசிரியரின் பேருரை
இரவு 08.15 முதல் 09.00 வரைதியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
இரவு 09.00 முதல் 09.30 வரைதியானக்கூடத்தில் கேள்வி நேரம்
இரவு 09.30 மணிதங்கும் அறைக்குச் செல்லுதல்; விளக்கணைப்பு

நிதியளித்தல்

விபஸ்ஸனா பயிற்சி பெற எந்த விதமான கட்டணமும் கிடையாது. உணவும், இருப்பிடமும் கூட இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. விபஸ்ஸனா முறையின் பாரம்பரியப்படி பயிற்சி முகாம்கள் நன்கொடைகளை மட்டும் கொண்டு நடத்தப்படுகின்றன. திரு சத்திய நாராயண் கோயன்கா அவரிடமோ அல்லது அவர்தம் உதவி ஆசிரியரிடமோ ஒரு முறையாவது பத்து-நாள் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து மட்டுமே நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முதன் முறையாக பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் ஒருவர், முகாமின் கடைசி நாள் அன்றோ, அதன் பின்னரோ நன்கொடை வழங்கலாம்.

இந்த முறையில், பயிற்சியின் பயனை தாமே சொந்தமாக உணர்ந்தவர்களே மேலும் பயிற்சி முகாம்கள் நடக்க வழிவகுக்கிறார்கள். தாம் பெற்ற பயனை பிறருக்கும் அளிக்கும் வகையில் மனமுவந்து தம்மால் இயன்றதைக் கொடுக்கலாம். முதல் முறையாக பயிற்சி பெறுபவர்கள், பயிற்சியின் முடிவிலோ அல்லது அதன்பிறகு எப்பொழுதுமோ நன்கொடை வழங்கலாம்.

இவ்வாறு வரும் நன்கொடைகள் மட்டுமே உலகம் முழுவதும் இந்த பாரம்பரியத்தின் கீழ் நடக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கான ஒரே வருவாய். செல்வந்தர்களான எந்த நிறுவனமோ தனிப்பட்டவரோ இந்த பயிற்சி முகாம்களுக்கு உபயம் செய்வதில்லை. மேலும், இதன் ஆசிரியரோ நிர்வாகிகளோ எந்தவிதமான சம்பளமும் பெற்றுக்கொள்வதில்லை. இவ்வாறாக, விபஸ்ஸனா நோக்கத் தூய்மையுடன் பொருள் ஈட்டும் குறிக்கோள் எதுவும் இன்றி பரவி வருகிறது.

நன்கொடை பெரியதாகினும், சிறியதாகினும், 'எனக்கு முன்னால் பயிற்சி பெற்றவர்களின் வள்ளன்மையினாலேயே நான் பயிற்சி பெறுவது சாத்தியமாயிற்று; எனக்குப் பின்னால் பலரும் இந்த தியான முறையின் பயன்களைத் அனுபவிக்க நானும் இனிவரும் பயிற்சி முகாம்கள் நடத்தும் பொருட்டு ஏதாவது வழங்குகிறேன்' என்கிற பிறருக்கு உதவும் நல்லெண்ணத்தோடே அளிக்கப்படவேண்டும்.

Monday, November 17, 2014

மூவர்களின் ஜீவசமாதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேமூன்று மகான்கள் சூட்சுமமாக அருள் பாலித்துவரும் 

அருள்நிறை ஸ்ரீ சங்கரானந்த சுவாமிகள்,
அருள்நிறை ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள்.
அருள்நிறை ஸ்ரீ மதுரை முனீஸ்வர சுவாமிகள்.இந்த மூவர்களின் ஜீவசமாதிகளும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிவகாசி சாலையில் கோவிந்தன் நகர் காலனி அருகே இருக்கும் சுடுகாட்டை ஒட்டி அமைந்திருக்கிறது.


வெகு காலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப் பகுதியில் வாழ்ந்து வந்தவர் அருள்நிறை ஸ்ரீமாணிக்கம் சுவாமிகள் ஆவார்.இவர் குளித்ததை பார்த்தவர்கள் எவருமில்லை;நானும் இவரைப் பார்த்திருக்கிறேன்.எப்போதும் இவர் பீடி குடித்தபடி காட்சியளிப்பார்;உடலெங்கும் அழுக்குத்துணிகளை அணிந்திருப்பார்;ஆனால், எப்போதும் இவரை நெருங்கும்போது கெட்ட வாடை வந்ததில்லை;நெசவாளர்கள் வாழும் தெருக்களிலும்,பஜார்களிலும் திடீரென யாரிடமாவது காசு கேட்பார்;தெருவுக்குள் எனில் சாப்பாடு கேட்பார்;அப்படிக் கேட்டு யார் இந்த சுவாமிக்குத் தருகிறார்களோ,அவர்களுக்கு அன்றிலிருந்து கஷ்டங்கள் நீங்கியிருக்கின்றன;பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது.எனக்குத் தெரிந்து,ஒரு குடும்பத்தினரிடம் தினமும் குறிப்பிட்ட நேரம் வந்து சாப்பாடு கேட்டிருக்கிறார்;பல நாட்களுக்குப் பிறகு,அந்த குடும்பத்தினர் இவரை திட்டிவிட,இவர் அதன்பிறகு அந்த குடும்பத்தார் இருக்கும் வீட்டுப்பக்கமே வருவதில்லை;இவர் வருவது நின்றது முதல் அந்தக்குடும்பம் குடும்பமாக இல்லை;


இவருடன் ஒரு சிலர் எப்போதும் இருந்திருக்கின்றனர்;தான் சமாதியாவதை முன்பே அறிந்திருந்து,இவர் தன்னோடு இருக்கும் கண்பார்வை குறைபாடிருந்த ஒருவரிடம் சொன்னார்: இன்று முழுவதும் என்னோடு இரு;நான் சமாதியானதும் உனக்கு முழுப்பார்வை தருகிறேன்.


ஆனால்,அந்த கண்பார்வை குறைபாடு இருந்தவர்,பயந்துகொண்டு அடுத்த சில நிமிடங்களில் இவரை விட்டு ஓடியே போனார்.

 அருள்நிறை ஸ்ரீமாணிக்கம் சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா ஒவ்வொரு சித்திரை மாதமும் வரும் மகம் நட்சத்திரத்தன்றும்,இவரது பிறந்த நாள் விழா பங்குனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்றும் வரும்.


அருள்நிறை ஸ்ரீ சங்கரானந்த சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் பரணி நட்சத்தன்று கொண்டாடி வருகின்றனர்.


அருள்நிறை ஸ்ரீ மதுரை சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா ஆனிமாதம் பூசம் நட்சத்திரத்தன்றும் கொண்டாடிவருகின்றனர்.


இந்த மூன்று நாட்களுமே கோலாகலமாக அன்னதானம் நடைபெற்றுவருகிறது.தவிர,சிறப்பு அன்னதானம் ஒவ்வொரு அமாவாசையன்றும்,பவுர்ணமியன்றும் நிகழ்ந்து வருகிறது.தவிர, தினமும் மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த மூவரும் ஏராளமான அற்புதங்களை செய்து வருகின்றனர்.


இவர்களின் அருளாசி கிடைக்க ஒரு சுலபவழி:(நமக்கு எடுத்துரைத்தவர்
கறுப்பு திராட்சை குறைந்தது ஒரு கிலோ; பேரீட்சைம்பழம் மூன்று பாக்கெட்கள்; டையமண்டு கல்கண்டு ஒரு கிலோ;நான்கு வாழைப்பழங்கள்; அரை லிட்டர் நல்லெண்ணெய்;பத்தி பாக்கெட் ஒன்று,கற்பூரம்  இவைகளை வாங்கிக்கொண்டு இந்த மூவர்களின் ஜீவசமாதிகளுக்கு  சனிக்கிழமை தோறும் சென்று காலை 9 முதல் 10.30க்குள் அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் வேண்டிக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு எட்டு சனிக்கிழமைகளுக்குச் செய்துவர,  நிரந்தர வேலை கிடைக்கும்;பணக்கஷ்டம் எவ்வளவு நெருக்கடியாக இருந்தாலும் அடியோடு விலகிவிடும்.பல அன்பர்கள் இம்முறையைப் பின்பற்றி இன்று நிம்மதியாகவும்,வசதியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.எட்டு சனிக்கிழமைகளுக்குப்  பிறகும் தொடர்ந்து இவ்வாறு வழிபட்டு வர, படிப்படியான பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் என்பது அனுபவ உண்மை!!!

.....
குறிப்பு: படத்தில் வசீகரிக்கும் காந்தக்கண்களோடு இருப்பவர் அருள்நிறை சங்கரானந்த சுவாமிகள்; அமர்ந்த நிலையில் கழுத்தில் துண்டு போட்டிருப்பவர் அருள்நிறை மாணிக்கம் சுவாமிகள்; வயதான தாத்தா ரூபத்தில் அரச மரத்தடி போட்டோவிலிருப்பவர் அருள்நிறை மதுரை சுவாமிகள்;


ஓம்சிவசிவஓம்

பாம்புக்கோவில் சந்தை ஜீவசமாதி

சக்திவாய்ந்த ஜீவசமாதி மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி பாம்புக்கோவில் சந்தை
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம்  சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது இந்த  பாம்புக்கோவில் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, காலை 11 மணி, மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது. சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது. மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.


பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக (செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.

பயணித்ததும், ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும். அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். இங்கே குறைந்தது ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்; அவ்வாறு ஜபிக்கத் தேவையான மஞ்சள் துண்டு.


இரு ருத்ராட்சங்களுடன் வருவோம் இந்த ஆசிரமத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் இடங்களும், அன்னதான வசதியும் இருக்கின்றன. யார் ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை தியானிக்கிறார்களோ, அவர்களுக்கு மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.இங்கு தங்குவோர் செய்ய வேண்டியது: இரவு ஒரு மணி நேரமும்,அதிகாலை ஒரு  மணி நேரமும் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதியில் மஞ்சள்துண்டு விரித்து .... ஜபிக்க வேண்டியது மட்டுமே!! தெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு மனிதனின் கஷ்டங்களையும் ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்!!!

Thank:
மேலும் தகவல்கள்களுக்கு :  98420 78733 


http://senthillakshmi.blogspot.in/2014/08/blog-post_615.html

Friday, November 7, 2014

தமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகளும் வழிபாட்டு முறைகளும்!

இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்டிகை நாட்களைக் கூர்ந்து கவனித்தால் பெரும்பாலும் அமாவாசையும் பவுர்ணமியும் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு நாட்களையும் நம் முன்னோர்கள் புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் இறைவனிடம் மனதை செலுத்த விரத நாட்களாகவும் ஆக்கினார்கள். அப்படி விரதம் இருக்க வேண்டுமானால் நம் உடலில் பலமும், மனதில் சக்தியும் வேண்டும். விஞ்ஞானபூர்வமாக பார்த்தால் அமாவாசை அன்று பூமி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் நேர் கோட்டில் வருவதால் அந்த நாளில் பூமியின் ஆகர்ஷண சக்தி அதிகமாக இருக்கும் அமாவாசைக்குப் பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து பவுர்ணமி அன்று அழகிய முழுநிலவு வானில் தோன்றும். அன்று பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும். அன்று மனித உடலுக்கு சக்தி அதிகமாக இருக்கும். பவுர்ணமி அன்று கடலுக்கும் சக்தி அதிகமாகி கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக பொங்குவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.


விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய நாளாகக் கருதப்படுவதால் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும், அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம். மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன். சந்திரனுக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார். ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேட நாட்களாகும்.

During the 12 months of the Tamil calendar year, every month there is a festival in madurai meenakshi temple . Festivals are celebrated in this temple thoughout the year. Some of the most popular festivals of the temple are Chitra festival , Avanimoola festival , Masi Mandala festival, Float festival, and Navarathri cultural festival.

சித்திரை - சித்ரா பவுர்ணமி

சித்திரை மாதத்தில் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வரும். சித்ரா பவுர்ணமி யன்றுதான் யமதர்மராஜாவின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று ஒரு நாள் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் மோக்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு தினம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் இந்நாளில்தான். சிவாலயங்களில் சிவனுக்கு மருக்கொழுந்தால் அபிஷேகம் செய்வார்கள்.
MEENAKSHI MADURAI CHITHIRAI BRAHAMOSTAVAM – ARUMIGU THIRUKKALYANAM.
வைகாசி - வைகாசி விசாகம்

வைகாசி மாதத்தில் பவுர்ணமியில் வரும் விசாகம் என்பது முருகப் பெருமான் பொய்கையில் ஆறு முகங்களுடன் அவதரித்த நாளாகும் என்பதால் முருகன் கோயில்களில் இந்தநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். சிவாலயங்களில் சிவனுக்கு சந்தனதத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்வார்கள். மேலும் புத்தபெருமான் அவதரித்ததும், ஞானம் பெற்றதும் இந்நாளில்தான்.

MEENAKSHI MADURAI VAIKASI VASANTHAM FESTIVALஆனி - ஆனித் திருமஞ்சணம்

ஆனி மாதத்தில் பவுர்ணமி கேட்டை நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள். ஆனி மாதத்தில் சிவபெருமான், பார்வதியின் அருளைப் பெற வழிவகுக்கும் நாளாகும். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனித் திரு மஞ்சனத் திருவிழா இந்த நாளில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
MEENAKSHI MADURAI  AANI UNJAL FESTIVALஆடி - ஆடி குரு பூர்ணிமா

ஆடி மாதத்தில் பவுர்ணமி உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு காராம் பசுவின் பாலால் அபிஷேகம் செய்வார்கள். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களை எழுதியவர் வேதவியாசர். ஆடி மாத பவுர்ணமியை வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்ற பெயரில் வியாசபகவானை பூஜிக்கிறார்கள். ஆடி மாத பவுர்ணமியில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் கஜேந்திர மோட்சம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அம்மன் கோயில்களிலும் இந்த பவுர்ணமி அன்று மாவிளக்கு போடுதல், பொங்கல் இடுதல், லலிதா ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை போன்ற விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன.
MEENAKSHI  MADURAI  AADI – MULAI KOTTU – FESTIVAL


ஆவணி -  அவிட்டம்

ஆவணி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு வெல்ல சர்க்கரையால் அபிஷேகம் செய்வார்கள் ஆவணி மாத பவுர்ணமி அன்று வட நாட்டில் ரக்ஷõ பந்தன் என்ற பண்டிகை தற்போது தென் இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி மாத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி அன்று கொண்டாடும் பண்டிகை ஆவணி அவிட்டம்.
MEENAKSHI  MADURAI  AAVANI MOOLAM FESTIVAL – " PUTTUKKU MANSUMANTHA LEELA FESTIVAL"


புரட்டாசி -  பூரட்டாதி

புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது. கேதார கௌரி நோன்பு விரத புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அஷ்டமியில் ஆரம்பித்து, இருபத்தியோரு நாட்கள் முடியும் வரையிலும் முறைப்படி அனுஷ்டிக
வேண்டிய விரதமாகும்.
MEENAKSHI SUNDARESHWARAR THIRUKKOVIL MADURAI PURATTASI NAVARATHRI FESTIVAL


ஐப்பசி -  அன்னாபிஷேகம்

ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும். எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் உணவளித்துக் காக்கும் சிவபிரானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிப்பார்கள். கேதாரநாத்தில் உள்ள சிவனுக்கு தேவ பூஜை ஐப்பசி பவுர்ணமி அன்றுதான் தொடங்குகிறது. தமிழ் நாட்டில் கங்கை கொண்ட சோழ புரத்தில் இவ்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.MEENAKSHI SUNDARESHWARAR THIRUKKOVIL MADURAI AYPPASI KOLATTAM FESTIVAL


கார்த்திகை - கார்த்திகை தீபம்

கார்த்திகை பவுர்ணமி கார்த்திகை நட்சத்திரத்திலேயே வரும். இந்த பவுர்ணமியில் எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்குப் பசு நெய்யால் அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை பவுர்ணமி நாளும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் ஏற்றப்படும் திருவண்ணாமலை தீபம் உலக பிரசித்தம். அன்று தான் பார்வதிக்கு ஈசுவரன் இடபாகம் தந்து அர்த்தநாரீசுவரன் ஆனார் என்பர்.MEENAKSHI SUNDARESHWARAR THIRUKKOVIL MADURAI KARTHIKAI KOLATTAM FESTIVAL

மார்கழி - திருவாதிரை

மார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இது பரமசிவனின் நட்சத்திரமாகும். இந்த நாளில் சிவனுக்குப் பசு நெய்யாலும் நறுமண பன்னீராலும் அபிஷேகம் செய்வார்கள். மார்கழியில் பாடப்படும் திருப்பாவை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று பவுர்ணமியில் துவங்குகிறது. கோயில்களில் ஆருத்ரா தரிசனமும் இந்த திருவாதிரை பவுர்ணமி அன்றுதான் கொண்டாடப்படும்.
MEENAKSHI SUNDARESHWARAR THIRUKKOVIL MADURAI MARGALI THIRUVATHIRAI – ARUDHRA DHARSAN FESTIVAL AND THIRUVEMBAVAI AND THIRUPPAVAI FESTIVAL.


தை - தைப்பூசம்

தை மாதத்தில் பவுர்ணமி பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் தைப்பூசம் முருகன் வழிபாட்டிற்கு ஈடு இணையே இல்லை. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலும் தைப்பூச தினத்தன்று முருகனுக்குக் காவடி எடுத்து அலகு வேல் குத்தி வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள் என்றாலும் அன்று முருகனுடன் சிவனையும் வழிபட வேண்டும். சிவனுக்கு அன்று கருப்பஞ்சாறால் அபிஷேகம் செய்வது உகந்தது. தைப்பூசத்தன்றுதான் உலகம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சத்தியஞான சபையைத் தோற்றுவித்த வள்ளலார் தைமாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று ஏற்றி வைத்த ஜோதி ஜோதி தரிசனமாகக் காட்டப்படுகிறது. சிவ பெருமான் உமா தேவியுடன் ஞான சபையான சிதம்பரத்தில் நடனம் ஆடி தரிசனம் தந்ததும் இந்த தைப்பூசத் திருநாளில்தான்.
MEENAKSHI  MADURAI THAI MAJOR PORTION OF  UTSAVAM PERFORMED IN A/M MEENAKSHI SUNDARESWARAR TEMPLE. THEPPORSTOVAM IN A/M MARIYAMMAN TEMPLE THEPPAM.


மாசி - மாசிமகம்

மாசி மாதத்தில் பவுர்ணமி மகம் நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்குப் பசு நெய்யில் அபிஷேகம் செய்வார்கள். இந்த நாளை மாசி மகம் என்று கோயில்களில் இறைவனை புனித நீர் நிலைகளில் நீராடல் செய்து கொண்டாடுவார்கள். இந்த நாளில் கடற்கரையை ஒட்டியுள்ள கோயில்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். வீடுகளில் அன்று சித்ரான்னங்கள் பாயசம் முதலியன செய்து நிலவிற்குப் படைத்து நிலவொளியில் குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள்.

MEENAKSHI  MADURAI  MASI -   MANDALA UTSAVAM FOR 48 DAYS.
பங்குனி - உத்திரம்

பங்குனி மாதத்தில் பவுர்ணமி உத்திர  நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு விரத தினமாக் கொண்டாடப்படுகிறது. கடவுளரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படும். இந்த பவுர்ணமியன்று திருச்செந்தூர் கோயிலில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடைபெறும். மேலும் பார்வதி தேவி சிவனை மணந்து கொண்ட நாள். மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமர் - சீதை, ஆண்டாள் - ஸ்ரீரங்கநாதர், சாவித்திரி - சத்தியவான், மயிலை கற்பகாம்பாள் - கபாலீஸ்வரர் திருமணங்கள் நடைபெற்ற நன்னாள். இந்த தினம் ஸ்ரீஐயப்பனும், அர்ஜுனனும் அவதரித்த திருநாள்.


இவைகளைத் தவிர எல்லா பவுர்ணமிகளிலும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்களால் கிரிவலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோயில், வேலூர் நாராயணீ பீடம், புவனேஸ்வரி அம்மன் கோயில், பிரத்யங்கிரா கோயில் முதலிய அம்மன் கோயில்களில் பவுர்ணமி அன்று பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, சத்தியநாராயண பூஜை, லலிதா சஹஸ்நாம பாராயணம் என்று பல விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இப்படி பவுர்ணமியாகிய முழு மதிநாளில் இறையருள் எங்கும் நிறைந்து கிடக்கிறது. அதை உணர்ந்து நாம் அன்றைய தின வழிபாட்டின் மூலம் ஆன்மிக வாழ்வில் உயர்வோம்.
MEENAKSHI  MADURAI PANGUNI SUMMAR VASANTHAM FESTIVAL


-V. Karthikeyan Ayya ( post on Apr 2, 2011 in agnilingam group  )

 
நின்று போன கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியான நேரத்தை காட்டுகிறது!

Thursday, November 6, 2014

Maheshwaran Pooja Annadanam


மகேஸ்வர பூஜை குருவையே தரிசிக்க

வைக்கும் என்றால் மிகை இல்லை. சன்னியாசிகளை அமரவைத்து அன்னதானம் செய்து மகேஸ்வர காலமான சிவ பெருமானுக்கு எப்படி பூஜை செய்யப்படுகிறதோ அது போலவே சிவனடியார்களுக்குச் செய்யப்படுகிறது. அன்னதானத்தின் மகிமையை அறியாதார் யாரும் இல்லை.

ஆனால் சிவனடியார்களை அமர வைத்து அவர்களை சிவனாகவே பாவித்து செய்யப்படும் அன்னதானத்தின்

மகிமையை அனுபவித்து பார்த்தல்தான் தெரியும். எந்த ஒரு லாப நோக்கமின்றி முற்றிலும் இறை பணியாகவே இந்த பூஜை செய்யப்படுகிறது.

இது எல்லாப் பரிகாரங்களையும் விட மேலான பரிகாரம்


Maheshwaran Pooja :

All Sadhus are see like GOD ,We Decorated with flowers on their head and offer food with kanikkai [ money ] and do puja to all Sadhu and we asked them to take Annadanam [food]...

When we doing this Annadanam, They will take our all karma..

Sathguru Chadaiswamy Ashram


5th Head Thavathiru Thirupatha Swamigal 

Old Palamaram cave

All Sadhus waiting for feast 

 Daily Annadanam for Sadhus and old people

 Annapoorani Feast hall


  Decorated with flowers on sadhu head 

 Offer food with kanikkai [ money ]

 we asked them to take food... 
Pic take in our  "Valarpirai Dvadashi Annadanam" on Nov 25 ,2012   at Thavathiru thiru padha swamigal  'Sathguru Chadaiswamy Ashram' at Palamaram cave ,  to Sadhus who living in annamalai hill side.